முகப்பு...

Monday, 24 February 2014

மௌனச்சிதறல்...

மௌனம் விதைக்கப்பட்டு
வார்த்தைகளை களையெடுத்து
அமைதி அறுவடை செய்யப்படுகிறது...
***
மனதில் இருக்கவேண்டிய இனிமை இல்லாது போவதால், இரத்தத்தில் இனிமை ஏறுகிறதோ...??!! நவீன இனிமை(சுகர்)
***
தட்டில் வேப்பங்காய் பரிமாறி, திராவகத்தைக் குடிக்கக் கொடுத்தவர்களிடம், பரிமாறிய இனிப்பு சுவையாக இருக்கிறதென கூறமுடியுமா...??!! 
பரிமாறப்படும் உணவின் தன்மை பொறுத்தே முகபாவமும் அமையுமென்பதை உணர்ந்து பரிமாறுவோம்..
#வாழ்க்கை நாடகத்தில் ஓர் காட்சி...
***
பசியோடு சாப்பிட காத்திருக்கும் ஒருவனிடம், கையில் வைத்திருக்கும் உணவை பிடுங்கி எரிந்துவிட்டு, விருந்து செய்யும்போது அழைக்கிறேன் வந்து சாப்பிடு என்பதுபோல் தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படாத அன்பு, ஆறுதல், நட்பு , தூக்கம், உணவு பயனற்றே போகுமென்பதை உணர்ந்துப் பகிர்வோம்..:)
***
அன்றைய தினத்தை இனிமையானதாகவும், அழகானதாகவும் பயன்படுத்த, மனமென்னும் கணினிக்கான மென்பொருள் காலைப்பொழுது. அதை தரவிறக்கம் செய்து சரிவர பயன்படுத்துவது அன்றைய தினத்தின் துவக்கத்தில் நாம் பேசும்/ நம்மிடம் பேசப்படும் வார்த்தையே. 
***











12 comments:

  1. பகிர்வது மிகவும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

    +1

    ReplyDelete
  3. மூன்றாம் பகுதி மிகவும் இரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    அருமையான கருத்தாடல்... சிந்திக்க வைக்கிறது...

    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மௌனமாய் சிதறினாலும் அத்தனையும் முத்துக்கள் அக்கா....

    ReplyDelete
  6. அத்தனையும் அருமை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__