முகப்பு...

Tuesday, 18 February 2014

முது(தனி)மை...!!

சுறுங்கிய தோலும்
இடுங்கிய கண்ணும்
நடுங்கும் கரங்களுடன்
வயோதிகத்திலும் 
சோறுவடிக்கும் - இவள்
அன்று பெய்த பாசமழை
விழலுக்கு இறைத்த நீராய்
வீணாகிப்போனதோ இன்று..??!!

தாய்க்கும் தாரத்திற்குமான
இடைத்தேர்தலில்
வெற்றிகொண்ட தாரத்தின்பொருட்டு
தரணியில் இவளும்
தனித்து விடப்பட்டாளோ
மனிதம் தொலைத்தவர்களால் ..??

இன்றும்..
விரும்பியவனை எண்ணியே
வெந்து தணிகிறாளோ ..?!

தனிமையை விரும்பியேற்ற இவளும்
வீட்டிற்கு வந்தவள்
வீதியிள் விட்டாளென
விருது வழங்கினாளோ..??

வெந்ததைத் தின்றே
விதிநோக்கியிருக்கும் இவள்
வீதியோரத்தை வீடாக்கிக்கொண்டாளோ..?

விதியோ..?
சமூகத்தின் சதியோ..?

விதியையும், சதியையும் முறியடிக்க
முதுமையிலும் போராடும்
இவள் போராட்டத்தின்
வெற்றிதான் எதுவோ..??!

இவளின் வெற்றிகண்டிடவே
விரும்பியழைக்கிறேன்
மனிதம் தொலைத்தவர்களை
மறுபரிசீலனை செய்திடவே...!

11 comments:

  1. வேதனைதான் சகோ...

    ReplyDelete
  2. காலத்தின் கோலம் வருந்த வைக்கிறது...

    ReplyDelete
  3. முதுமையிலும் விடவில்லை பணிச்சுமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காலத்தின் கோலத்தைச் சொல்லும் வேதனைக் கவிதை..
    அருமை அக்கா..

    ReplyDelete
  5. இன்றைய சூழ்நிலையில் இதுபோல் எத்தனையோ பெற்றோர்கள் கைவிடப்பட்டவர்களாய்க் காலந்தள்ளுகிறார்கள்.

    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க...தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..:)

      Delete
  6. படம் - வேதனை தந்தது.

    கவிதை அதனை பிரதிபலிக்கிறது!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__