முகப்பு...

Friday, 24 January 2014

வார்த்தை (விதை)கள்...!!

இனிப்பு, புளிப்பு, கசப்பு
காரமெனப் பல்சுவை
வார்த்தைப் பரிமாற்றத்தில்...!

பிடித்த சுவை இனிப்பென
பரிமாறிட..
இனிப்பில் ஒவ்வாமை இருக்கென
காரத்தையே
தேர்ந்தெடுத்திட்டால்
பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..?

விரும்பியவர்
விருப்பத்திற்காய்
காரம் பரிமாறப்படுகிறது
விரும்பியோ, விரும்பாமலோ..!!

காலமது செய்யும் கோலத்தில்
இனிப்பாய் வழங்கிடும்
வார்த்தையுமிங்கே
கசப்பாய்த் தோன்றி
வெறுப்பாய்  மாறிடுது....!!

இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும்
கசப்பு வார்த்தையும்
புளிப்பாய்த் திகழ்ந்திடுதே
புவிதனில்...!!

இனிப்பு,கசப்பு,புளிப்பு
காரமென பல்சுவையும்
வரக்கூடும் வார்த்தைப்
பரிமாற்றத்தில்...!!

பரி(கிர)மாறப்பட்ட
வார்த்தை ஒன்றெனினும்
சுவைக்கப்படும்
வார்த்தையின் “சுவை”
அவரவர் எண்ணத்திலன்றோ...!!

4 comments:

  1. சுவையோடு வார்த்தைகளை ஒப்பிட்டது அருமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோ..:)

      Delete
  2. பரி(கிர)மாறப்பட்ட
    வார்த்தை ஒன்றெனினும்
    சுவைக்கப்படும்
    வார்த்தையின் “சுவை”
    அவரவர் எண்ணத்திலன்றோ...!! // உண்மையான கருத்துக்கள்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோ..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__