மரணத்தைத் தழுவத் துடிக்கும்
சிந்தனையை
சிறைவைக்கிறேன்...!!
படைசூழ பவனிவந்து
அரியாசனத்தில் அமர்ந்து
ஆட்சிசெய்யும் நீ
ஏதேனும் ஓர் நொடி
தனித்திருக்கக்கூடும்..!
மர(றந்)த்துப்போன
உன் உணர்வுப்பூக்கள்
புத்துயிர் பெற்று..
அன்பின் ஆழத்தை உணர்ந்தமனம்
நின் கண்மலர்களில்
கண்ணீர்த் துளிகளை
மலரச்செய்யலாம்..!
செந்நீராய்க் காட்சியளிக்கும்
நின் கண்ணீரைக் காணும் மனவலிமை
எனக்கு மட்டுமல்ல
என் ஆன்மாவிற்கும் இல்லையென்பதால்..
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அழகு....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
அப்படிச் செய்யுங்கள்...
ReplyDeleteநன்றி சகோ..:)
Delete//மரணத்தின் மீதான தாகத்திற்கு
ReplyDeleteமரணதண்டனை விதிக்கிறேன்..!!//
முடிவு வரிகள் முத்திரை பதிப்பதாக ! ;)))))
பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ஐயா..:) _/\_
DeleteArumai..
ReplyDeleteநன்றி சகோ.:)
Deleteகவிதை நன்று.
ReplyDeleteமகிழ்ச்சி தம்பி..:)
Delete