அன்றைய தினத்தை சூன்யமாக்கவும், மகிழ்ச்சிப்பூவை மலரச்செய்யவும் அன்புடையவரின் அலட்சியமான/அன்பான ஒற்றை சொல் போதுமானதாகிறது.
***
உறவு வண்டியில்
நம்பிக்கை எரிபொருளூற்றி
இலட்சிய நிறுத்தம் நோக்கிப் பயணிக்க
கசியும் எரிபொருள்
வேகத்தை குறைக்குமா..?
விபத்தையடைந்து
பயணம் தடைப்படுமா..?
கவலைகள் தோன்றிடினும்
நிறுத்தத்தை சென்றடைய
குறையும் எரிபொருளை நிரப்பியவண்ணம்
நாளும் தொடர்கிறது
முயற்சிகள்..:)
***
எங்கோ விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்படாத விடவார்த்தைகளின் எச்சம் விரும்பியவரையும் விடமாய்த் தீண்டுகிறது நம்மையறியாமலேயே..
***
சிந்தையில் தோன்றுவதை
என் மனம் உணருமுன்னே
வார்த்தையாகி
உன்செவியைச் சென்றடைகிறது
நீ விரும்பியோ
விரும்பாமலோ...!!
முயற்சிகள் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ..தங்களின் தொடர் ஊக்குவிப்பிற்கு..:)
Deleteமிக மிக அற்புதம்
ReplyDeleteகருப் பொருளும் சொல்லிச் சென்ற அழகும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி...:) _/\_
Deletetha.ma 3
ReplyDelete:) _/\_
Deleteஅருமையான குறுங்கவிதைகள்! நன்றி!
ReplyDeleteஎல்லாம் நன்று...
ReplyDelete:) மிக்க மகிழ்ச்சி தம்பி..:)
Delete