முகப்பு...

Tuesday 21 January 2014

எண்ணச்சிதறல்...

அன்றைய தினத்தை சூன்யமாக்கவும், மகிழ்ச்சிப்பூவை மலரச்செய்யவும் அன்புடையவரின் அலட்சியமான/அன்பான ஒற்றை சொல் போதுமானதாகிறது.
***
உறவு வண்டியில் 
நம்பிக்கை எரிபொருளூற்றி 
இலட்சிய நிறுத்தம் நோக்கிப் பயணிக்க
கசியும் எரிபொருள்
வேகத்தை குறைக்குமா..?
விபத்தையடைந்து
பயணம் தடைப்படுமா..?
கவலைகள் தோன்றிடினும்
நிறுத்தத்தை சென்றடைய
குறையும் எரிபொருளை நிரப்பியவண்ணம் 
நாளும் தொடர்கிறது 
முயற்சிகள்..:)
***
எங்கோ விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்படாத விடவார்த்தைகளின் எச்சம் விரும்பியவரையும் விடமாய்த் தீண்டுகிறது நம்மையறியாமலேயே..
***
சிந்தையில் தோன்றுவதை 
என் மனம் உணருமுன்னே
வார்த்தையாகி 
உன்செவியைச் சென்றடைகிறது
நீ விரும்பியோ
விரும்பாமலோ...!!

9 comments:

  1. முயற்சிகள் தொடரட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..தங்களின் தொடர் ஊக்குவிப்பிற்கு..:)

      Delete
  2. மிக மிக அற்புதம்
    கருப் பொருளும் சொல்லிச் சென்ற அழகும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான குறுங்கவிதைகள்! நன்றி!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__