குழந்தையின் அழுகைக்கு - விடிதல்
அன்னையின் அரவணைப்பில்..
மாணவனுக்கு - விடிதல்
தேர்வு முடிவினில்..
ஆசிரியருக்கு - விடிதல்
மாணவர்களின் தேர்ச்சியில்..
குழந்தைத்தொழிலாளிக்கு - விடிதல்
தரமான கல்வியில்..
வறுமைக்கு - விடிதல்
வசதியில்..
அனாதைக்கு - விடிதல்
நல்லோரின் ஆதரவில்..
வணிகனுக்கு - விடிதல்
வியாபார லாபத்தில்..
எழுத்தாளனின் - விடிதல்
அவனுக்கான அங்கீகாரத்தில்..
பேச்சாளனுக்கு - விடிதல்
காதைப்பிளக்கும் கரகோஷத்தில்..
ராணுவ வீரனுக்கு - விடிதல்
எதிரியை வெற்றிகொள்கையில்..
கூலித்தொழிலாளிக்கு - விடிதல்
நிரந்தர வருமானத்தில்..
தனிமைக்கு - விடிதல்
நல்ல தோழமையில்..
விவசாயிக்கு - விடிதல்
நல்ல விளைச்சலில்..
நோயாளிக்கு - விடிதல்
தரமான மருத்துவத்தில்...
முதுமைக்கு - விடிதல்
மனிதத்தின் ஆதரவில்...
தெருவோரம் வசிப்போர்க்கு - விடிதல்
வசிப்பதற்கான ஒரு குடிசையில்..
தேவைகள் நிறைந்த புவிதனில்..
அவரவர் எதிர்பார்ப்பில்
விடிதலை நோக்கியப் பயணமுந்தான்
நாளும் தொடர்கிறதே..!
மனிதனின் முடிவாம் மரணம்..!
மரணத்தின் விடிதல் நன்றாம்
ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம்
அறிந்தோரிருக்கும் அவனியிலே..
மரணத்தின் விடிதல்
அறிவோரும் உளரோ...?!
அன்னையின் அரவணைப்பில்..
மாணவனுக்கு - விடிதல்
தேர்வு முடிவினில்..
ஆசிரியருக்கு - விடிதல்
மாணவர்களின் தேர்ச்சியில்..
குழந்தைத்தொழிலாளிக்கு - விடிதல்
தரமான கல்வியில்..
வறுமைக்கு - விடிதல்
வசதியில்..
அனாதைக்கு - விடிதல்
நல்லோரின் ஆதரவில்..
வணிகனுக்கு - விடிதல்
வியாபார லாபத்தில்..
எழுத்தாளனின் - விடிதல்
அவனுக்கான அங்கீகாரத்தில்..
பேச்சாளனுக்கு - விடிதல்
காதைப்பிளக்கும் கரகோஷத்தில்..
ராணுவ வீரனுக்கு - விடிதல்
எதிரியை வெற்றிகொள்கையில்..
கூலித்தொழிலாளிக்கு - விடிதல்
நிரந்தர வருமானத்தில்..
தனிமைக்கு - விடிதல்
நல்ல தோழமையில்..
விவசாயிக்கு - விடிதல்
நல்ல விளைச்சலில்..
நோயாளிக்கு - விடிதல்
தரமான மருத்துவத்தில்...
முதுமைக்கு - விடிதல்
மனிதத்தின் ஆதரவில்...
தெருவோரம் வசிப்போர்க்கு - விடிதல்
வசிப்பதற்கான ஒரு குடிசையில்..
தேவைகள் நிறைந்த புவிதனில்..
அவரவர் எதிர்பார்ப்பில்
விடிதலை நோக்கியப் பயணமுந்தான்
நாளும் தொடர்கிறதே..!
மனிதனின் முடிவாம் மரணம்..!
மரணத்தின் விடிதல் நன்றாம்
ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம்
அறிந்தோரிருக்கும் அவனியிலே..
மரணத்தின் விடிதல்
அறிவோரும் உளரோ...?!
வணக்கம்
ReplyDeleteஅருமை ரசித்தேன்...வாழ்த்துக்கள்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்..வாங்க சகோ.நன்றி..:)
Deleteஆம் விடிதல் என்பதை
ReplyDeleteமுடிவு என்பதைப் போல் இல்லாமல்
நிறைவு என உணரச் செய்து போகும்
கவிதை அருமை
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
:) நன்றி தங்களின் வாழ்த்திற்கு..:)
Deletetha/m,a 3
ReplyDelete_/\_ :)
DeleteMmm..
ReplyDeleteNalla kavithai...
:) நன்றி சகோ..:)
Deleteஅருமை... உண்மை... முடிவில் நல்ல கேள்வி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றியும், மகிழ்ச்சியும் சகோ..:)
Deleteநல்ல கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteவாங்க...நன்றி..:)
Delete