முகப்பு...

Tuesday 26 November 2013

நொடியில் ஏற்படும் மாற்றம்...

நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு 
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும் 

நொடியின் நொடியெதுவோ..??!!

12 comments:

  1. வணகம்
    சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்..மிக்க மகிழ்ச்சி..:)

      Delete
  2. நொடியில் ஏற்படும் அன்பு
    கோபத்தை மறக்கச் செய்கிறது!..
    நொடியில் ஏற்படும் நட்பு
    பகையை மறக்கச் செய்கிறது!..

    - அருமையான வரிகள்!.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்..:)

      Delete
  3. நொடியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய பட்டியல் அருமை.

    //நொடியில் ஏற்படும் அன்பு
    கோபத்தை மறக்கச் செய்கிறது!..
    நொடியில் ஏற்படும் நட்பு
    பகையை மறக்கச் செய்கிறது!..//

    ;)

    ReplyDelete
  4. நொடியில் அசர வைத்து விட்டீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. நொடியில் பிறந்த கவிதை-மனதில்
    நெடிதும் சி (பி)றக்கும் விதை

    ReplyDelete
  6. நொடியில் வந்த சிந்தனை அருமை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..வாழ்த்து எம் எழுத்தை மெருகேற்றட்டும்..:).

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__