ஒருவேளை போதைக்காக
உடைக்கப்பட்ட
பாதாள சாக்கடையின் இரும்பு மூடியும்,
மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றிலிருந்து
வெட்டப்பட்ட இரும்பும்
விளக்குகிறது
சமுதாயத்தின் மீதான அக்கறையை..!!
*****
விபத்துக்குள்ளானவர்களிடம்
களவாடப்பட்ட பொருட்களும்..
அவசர சிகிச்சையில் சேர்ப்பதற்கு
இங்குமங்கும்
அலைக்கழிக்கப்படுவதிலும்
சவத்தை எடுத்து செல்ல காசுகேட்டு
அடாவடி செய்யும் பிணவறை ஊழியரிடமும்
வெளிப்படுகிறது மனிதாபிமானம்..
*****
பசிக்கொடுமையில்
எச்சிலையானாலும்
எடுத்துண்ண தயங்காதவனை
வட்டமேசை மாநாட்டில்
சீண்டப்படாதிருக்கும் உணவுகள்
எள்ளி நகைத்தபடி விளக்குகிறது
கருணையுள்ளத்தை..!!
*****
நல்ல கவிதை.
ReplyDeleteஎன் தமிழ்மணம் வோட்டு +1
தொடர்ந்து எழுதுங்கள்!
வாங்க தோழர்..தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. :)
Deleteகவிதைகள் மிக..மிக் அருமை
ReplyDeleteவாங்க தோழர்..தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. :)
Deletesu.....per sako..!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..:) :)
Deleteஇப்படியான சமூகத்தில் தான் நாமும்....
ReplyDeleteம்ம் உண்மைதான் தோழி..:)
Deleteசமுதாயத்தின் மீதான அக்கறை,
ReplyDeleteமனிதாபிமானம் மற்றும்
கருணையுள்ளம் ..... ஆகியவை
சாட்டையடி வாங்கியுள்ளன உங்கள் பார்வையில்.
பகிர்வுக்குப்பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
தங்களுடைய வாழ்த்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா.._/\_
Deleteஅருமையான படைப்பு! ஒவ்வொரு வார்த்தைகளும் பளீர் என அறைகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்,...தங்கள் அனைவரின் வாழ்த்தும் எமது எழுத்துக்கள் சிறக்க செய்யட்டும்..
Deleteகவிதை அருமை.
ReplyDelete:):) கவிதை...!!! நன்றி தம்பி..:)
Delete