குழந்தைகள் எத்துனை பெரியவர்களானும் அவர்களின் சிறு சிறு உரையாடல் என்றும் மனதின் ஓரிடத்தில் நீங்கா இடம்பிடித்து மகிழ்வித்துக்கொண்டேயிருக்கின்றன. ...:)
1. ஜன்னலோரப்பயணத்தில் தென்றல் தனைத் தழுவியபொழுது, காத்துல மூஞ்சி பறக்குது(மூஞ்சியில் காற்று அடிக்குது) என்ற மகளின் சொல்லாடல்....:)
2. தீபாவளிக்கு பூஜை செய்யும்போது (இங்கு திராட்சை, வால்நட், பாதாம், முந்திரி இப்படி உலர்பழ வகைகள் வைத்து கும்பிடுவது வழக்கம் ) வால்நட் அதிகம் வை...சாமிக்கு அறிவு நல்லா வளரும் என்ற யதேச்சையான நகைச்சுவை..:)
3. கோவிலுக்கு செல்லும் தந்தையிடம்...நான் முருகனை விசாரித்ததா சொல்லு..என்னுடைய ஆசீர்வாதம் என்னிக்கும் முருகனுக்கு உண்டு.. :)
இப்படி மனதில் பட்டதை யாரும் எதும் சொல்வார்களோ என்ன நினைப்பார்களோ என உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசாது யதார்த்தமாய் பேசி மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்களைப்பற்றி நினைக்கும்போதே உதட்டோரம் ஒரு புன்னகையை வரவழைக்கும் சிறப்பு மலருக்கும், மழலைக்குமே சாத்தியமாகிறது. குழந்தைகள் என்றுமே ரசனைக்குரியவர்கள். குழந்தைகள் வளர்ந்தாலும், குழந்தை மனம் அப்படியே இருக்கட்டும்..:)
//அவர்களைப்பற்றி நினைக்கும்போதே உதட்டோரம் ஒரு புன்னகையை வரவழைக்கும் சிறப்பு மலருக்கும், மழலைக்குமே சாத்தியமாகிறது. குழந்தைகள் என்றுமே ரசனைக்குரியவர்கள். குழந்தைகள் வளர்ந்தாலும், குழந்தை மனம் அப்படியே இருக்கட்டும்..:)//
ReplyDeleteஅழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ஐயா..:)
Deleteunmai...
ReplyDeleteநன்றி சகோ..:)
Deleteஉண்மைகள்...
ReplyDeleteநன்றி சகோ..:)
Deleteவணக்கம்
ReplyDeleteமகிழச்செய்யும் மழலைகள் பதிவு நன்று குழந்தையின் மனம் தூயமையானது....
அவர்கள் யாவரையும் மகிழவைப்பார்கள்..... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தோழரே..:)
Delete