ஒற்றைப்புன்னகையில்தான்
எத்தனையெத்தனை
அர்த்தங்கள்..!!
காதலை
உணர்த்தாமல் உணர்த்தி
உணர்த்தாமல் உணர்த்தி
நெகிழச்செய்யும் புன்னகை..!
கவலைகளை
மறக்கச்செய்யும்
கள்ளங்கபடமற்ற மழலையின்
குறும்புப் புன்னகை..!
கண்களை செருகச்செய்யும்
காமத்தின் தூதாய்
புன்னகை..!
உடன்பாடில்லா ஒப்பந்தம்
நிறைவேறும்போது
மௌனப்புன்னகை..!
கொந்தளிக்கும் மனம்
கொட்டத்துடிக்கும்
கோப வார்த்தைகளுக்கு
தடைபோடும்
அமைதிப் புன்னகை..!!
ஊடலின் உச்சத்தை
எச்சமின்றி செய்யும்
புன்னகை..!
சண்டைக்கு
சமாதிகட்டும் சமாதானப்
புன்னகை..!
செலுத்தப்படும் அன்பை
புறக்கணிக்கும்
அலட்சியப்புன்னகை..!
பிறரின் வார்த்தைகளை
ஏற்கமறுக்கும்
கேலிப்புன்னகை..!
சம்மதத்தைத் தெரிவிக்கும்
அமைதிப்புன்னகை..!
புன்னகைக்க
மற(று)க்கும் மனத்தோரே
புன்னகையின்
வலிமை அறிந்து
பொன்னகையாய்ப்
புன்னகைபூண்டிடுவோமே..!!
அர்த்தங்கள் பொதிந்த
புன்னகையின்
மதிப்பை அறிந்து
புன்னகைக்குப்
புன்னகையை
புன்னகையால்
வழங்கிடுவோம்..!
உங்கள் பதிவில் புன்னகையைபார்த்து நானும் ரசித்து புன்னகைத்து செல்லுகிறேன். இந்த நாள் உங்களின் புன்னகையைப் போல பிரகாசமாக இருக்க வாழ்த்துக்கள் tha.ma 1
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி நண்பரே..தங்களுக்கும் என்றும் புன்னகை நிறைந்திருக்கட்டும்..:)
Deleteஆகா... ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
:) மிக்க நன்றி சகோ..:)
Deleteபுன்னகையை வரவழைத்த அழகான வரிகள். பாராட்டுக்கள்.
ReplyDelete:) மிக்க நன்றி ஐயா..:)
Deleteபுன்னகையை புதுவிதமாய் பார்க்க வைத்து விட்டது கவிதை, அருமை
ReplyDeleteவாங்க சுமன்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..தொடர்ந்திருக்கவும்..:)
Deleteபுன்னகைக் கவிதை புன்னகைக்க வைத்தது அக்கா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
:) :) புன்னகையுடன் நன்றி தம்பி..:)
Deleteபுன்னகை அரசி...:)
ReplyDelete:) :) நன்றி மீராம்மா..:)
Delete