முகப்பு...

Monday 25 November 2013

குழந்தைகள்...:)

உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தன் 

கண்களிடத்தே தேக்கிவைத்து, தம் குறுஞ்சிரிப்பால் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி சொர்க்கம் இதுவென உணர்த்தும் வல்லமை குழந்தைகளிடத்தே இருக்கிறது. 


விளையாடுவதற்கு ஆடம்பர பொருட்கள் வேண்டும், அமர்ந்திருக்க விலை உயர்வான சோஃபா வேண்டும் அங்கேதான் உள்ளது மகிழ்ச்சியென தத்தம் மகிழ்ச்சிதனை வட்டத்திற்குள் சுறுக்கிக்கொள்ளாமல், கீழே கிடந்த பொம்மையினை, தூக்கியெறியப்பட்ட பூச்சரத்தை உதிர்த்து அலங்கரித்து விளையாடும்போது கூட… விலை கொடுத்து வாங்கமுடியா மகிழ்ச்சிதனை தன் பிஞ்சு முகத்தில் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகள், மனமிருந்தால் எந்த சூழலிலும் மகிழ்ச்சியினை அடையமுடியும் என எடுத்துரைக்கும் ஆசான்களாய் தோற்றமளிக்கின்றனர்....!!

14 comments:

  1. அருமை... உண்மை... அந்த வல்லமையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ...வல்லமையை வளர்த்துக்கொள்ள எண்ணினாலும் சிலநேரம் அறியாமையில் மனம் தடுமாறத்தானே செய்கிறது..:)

      Delete
  2. உண்மைதான்! குழந்தைகள் உலகம் அழகானது! அருமையானது!

    ReplyDelete
  3. // மனமிருந்தால் எந்த சூழலிலும் மகிழ்ச்சியினை அடையமுடியும் என எடுத்துரைக்கும் ஆசான்களாய் தோற்றமளிக்கின்றனர்....!!//

    ஆம். உண்மை தான். குழந்தைகளால் எப்போதும் மகிழ்ச்சியே.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. குழந்தைகளால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை இந்த உலகத்தில் இல்லை tha.ma 3

    ReplyDelete
  5. குழந்தகளால் தான் மகிழ்ச்சியே!.. குழந்தையோடு குழந்தையாய் குதுகலிக்கும் போது - ஆயுள் கூடுகின்றது!..

    ReplyDelete
  6. வணக்கம்
    குழந்தைகளின் வாழ்க்கை வட்டம் ஒரு மகிழ்ச்சிக்கடல்.... சிறப்பான பதிவு... தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். மிக்க மகிழ்ச்சி தோழரே தொடர்ந்த ஊக்கத்திற்கு..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__