முகப்பு...

Wednesday 13 November 2013

காணவில்லை..


அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

**************


அதிகாலை அரக்கப்பரக்க
அலறியடித்து எழாது..
அமைதியை 
முகத்தோட்டத்தில் விதைத்து
கண்மலர்களில் 
படபடக்கும் பட்டாம்பூச்சியுடன்
கனவுகளையும், கற்பனைகளையும்
காட்சியாக்கிக் கதைகள்கூறும் 
பூச்செடிகளைக் காணவில்லை...!!

அன்னை பரிமாறுவது
அமுதமென 
காலையிலும் அமர்ந்து
உண்டுகளித்து...
அறிவுப்பசி தீர்க்க
பள்ளி செல்லும் பாலகர்களைக்
காணவில்லை..!!
 
புத்தகங்களை 
சுமையாகவும்
பள்ளியை 
சிறைச்சாலையாகவும் எண்ணாது...
மகிழ்ச்சியை வழங்கும்
பரிசுப்பெட்டகமாய்
மகிழும் மாணாக்கர்களைக்
காணவில்லை...!!

அறைக்குள் அடைபட்டு
கணினியே உலகமெனக் கருதாது
அந்திமாலைப் பொழுதின் 
அழகைக் கண்டு ரசித்து
ஆடிமகிழ்ந்திட்டக் குழந்தைகளைக்
காணவில்லை...!!

இரவுவேளையில்
இல்லத்தினர்களோடு
இன்பமாய் உண்டுகளித்த
குழந்தைகளைக் காணவில்லை..!!

தாயின் மடியில் தலைவைத்து
புடவைத் தலைப்பை
கெட்டியாய்ப் பிடித்து
கதைகேட்டு உறக்கம் தழுவிய
கள்ளம் கபடமற்ற உள்ளத்தினரைக்
காணவில்லை..!!

குழந்தைகள் தினமாம் இன்றேனும்
குழந்தையுள்ளத்தைத் தொலைத்திட்ட
குழந்தைகள் 
குழந்தைப்பருவத்தை
குழந்தையின் இருப்பிலிருந்து
குழந்தையாய் இருந்திடும்
குழந்தைகளைக் கண்டிடும் 
வாய்ப்புண்டா..??
ஏங்கித்தவிப்பது
குழந்தைகளா..?
குழந்தைகளைக் 
குழந்தைகளாய்க் காணமுடியாப் 
பெற்றோர்களா..??

7 comments:

  1. வணக்கம்

    சிறப்பான தினத்தில் மிகச்சிறப்பான கவிதை அருமையாக உள்ளது படங்களும் அருமை வாழ்த்துக்கள்...

    தீபாவளிச் சிறப்பு கவிதையின் இறுதி முடிவு வெயியாகியுள்ளது வந்து பாருங்கள் என்னுடை வலைப்பூவில் https://2008rupan.wordpress.com



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே..மிக்க மகிழ்ச்சி..அவசியம் பார்வையிடுகிறேன்.

      Delete
  2. அவசர உலகின் வேகத்தில் குழந்தைகளின் மீது காட்டபடும் அக்கறை வெகுவாய் குறைந்துள்ளது/// எந்திர வாழ்க்கையின் பரிசு இதுங்க ... உணர்ந்து செயல்படுவோம் கவி வரிகள் நன்று

    ReplyDelete
  3. அருமை! குழந்தைகள் உலகம் காணமல் தான் போய்விட்டது! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__