முகப்பு...

Thursday 7 November 2013

விசுவும், நானும் - 2


காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு      : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.

காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!

விசு      : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?

காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..

விசு      : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .

காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..

விசு      : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..

காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. ?

விசு     : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.

காயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா..? எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..? எழுத்தாளனின் பிரதிபலிப்புதான் எழுத்தா...??

விசு     : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா

காயத்ரி : :)

விசு     : எழுத்தாளனோட
             எண்ணம் எழுத்தாவதும்
             எழுத்தே எண்ணமாவதும்..
             எண்ணத்திலிருப்பது அனைத்தும்
             எழுத்தாகாமல் போவதும்..
             எழுத்தில் வந்ததெல்லாம்
             எழுத்தாளனோட  எண்ணமா
             இல்லாமல் போவதும் உண்டு..

காயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.

விசு      :சந்தோசமா எழுதறவன் எல்லாம்
              சந்தோசமா இருக்கான்னோ,
              சோகமா எழுதறவன் எல்லாம்
              சோகமா இருக்கான்னோ,
              சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
              சமூக ஆர்வலன்னோ
              ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்                                          
              பகுத்தறிவாளன்னோ
              பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
              ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
              பெண்ணீயம் பேசறவன்
              பெண்களைப் போற்றுபவனோ
              பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
              பெண்களை வெறுப்பவனோ..
              இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
              மனிதாபிமானம் உடையவன்னோ
              யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
              கல்மனசுக்காரன்னோ இல்ல..

              சந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்
              சோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்
              சமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது             
              அக்கறையின்றியும்
              ஆன்மீகத்தைப் பேசுபவன் நாத்திகனாகவும்
              பகுத்தறிவு பேசறவன் பக்தியாளனாகவும்
              பெண்ணீயம் பேசறவன்                                                        
              பெண்களுக்கெதிரானவனாவும்..
              இரக்கமா எழுதறவன் கொலைபாதகனாகவும்
              யதார்தமா எழுதறவன் இரக்ககுணமுடையவனாவும்
              இருந்ததில்லையா...?
              இருக்கக்கூடாதா...
              இருக்கமாட்டாங்களா..? என்னம்மா சொல்ற..??

காயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..

விசு      :குழப்பமா பேசறவங்க எல்லாம்
              குழப்பவாதியோ
              தெளிவா பேசறவங்க எல்லாம்
              தெளிந்த சிந்தனையுடையவங்களாவோ                                 
              இருக்கனுமா என்ன..
              குழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு
              தெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..
              குழப்பமும், தெளிவும்
              கொடுக்கறவங்களவிட
              எடுக்கறவங்ககிட்டதான் இருக்கு..
              அப்படித்தான் எழுத்தும் எழுத்தாளனும்..
              அவன் பொதுவாத்தான் கொடுக்கறான்                                   
              எடுக்கறவங்க
              எடுக்கறத வச்சிதான்
              கொடுக்கிறது கணிக்கப்படுது..
              கொடுக்கறதுல
              எடுக்கறது தப்பாயிருந்தா
              கொடுக்கறதும் தப்பாயிடும்..
              என்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...

காயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..

குழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)

விசு      : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..

காயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)

14 comments:

  1. ஆம் காயத்ரி எழுத்தாளனின் எழுத்தை வைத்து முழுவதுமாக அவரை நிர்ணயிக்க முடியாதெனினும்.... எல்லா தளங்களிலும் ஒருவரால் நல்ல நடிகனாகப் பரிமளிக்க முடியாது...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...எழுத்தே அவனில்லை.. எழுத்தில் கொஞ்சம் அவனிருக்கலாம்..:)

      Delete
  2. இப்ப நான் ஓடிடறேன்!??!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா....ஆனா திரும்ப அடுத்தப்பதிவுக்கு வந்திடுங்க..:)

      Delete
  3. தெளிவாகக் குழம்பி - குழப்பத்தில் தெளிவு!..

    அருமை!..

    ReplyDelete
  4. வணக்கம்
    உரையாடல் அருமை புரியாத பதிலுக்கு பதில் கிடைத்து விட்டது... போல.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. மிக அற்புதமான அவசியமான உரையாடல்,
    தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை குழப்பியவரும்,
    தமிழாற்றலால் தூரிகையில் குழப்பிக்கொண்டிருப்பருவரும்
    கலந்துரையாடியவிதமும், உரையாடிய விசயமும் அருமை.

    இந்த உரையாடலானது முகநூல் மற்றும் வலைத்தளங்களில் பல எழுத்தாளர்களின் எழுத்தை படித்து குழம்பிப்போயிருக்கும் பலரின் குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது,
    ஒருவருடைய எழுத்தைவைத்து அந்த எழுத்திற்கும் எழுதியவருக்கும் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு தனது கருத்துக்களை தெரிவிக்கும் சிலருக்கு இந்த குழப்பாமான உரையாடலானது அப்படியல்ல இவை எங்களின் எழுத்தாற்றலே என்பதை தெளிவாக்கியுள்ளது.

    ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்தானது அன்றாடம் நாம் சமூகத்தில் சந்திக்கும் சிலரது வாழ்வு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், சில அக்கம்பக்கத்து குடும்பங்களில் நடக்கும் விசயமாக இருக்கலாம், சமூகத்தில் நடக்கும் அவலங்களாக இருக்கலாம் உதாரணமாக சமீபத்தில் அநேகர் இசைபிரியா பற்றிய சோகத்தை அவரவர் எழுத்தாற்றலுக்கு தகுந்தாற்போல் எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம் அவர்கள் அனைவரும் அந்த சோகத்தை அனுபவித்தவர்கள் அல்ல அந்த சோகத்தை அறிந்தவர்கள்தான் அதேபோல்தான் ஒவ்வொருவருடைய எழுத்தும் அவர் வாழ்வில் அனுபவித்ததல்ல அறிந்ததே என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளும்விதத்தில் இந்த இருவரும் தனது இயல்பான குழப்ப உரையாடல்மூலமாக தெளிவுபடுத்தியுளார்கள்.

    சிலர் தனது சொந்த வாழ்வின் அனுபவத்தைப்பற்றி கட்டுரையாக எழுதுவதும் உண்டு ஆனால் அனைத்து எழுதுபவரின் சூழல் அல்ல சுற்றுச்சூழலின் நடைமுறைதான் என்பதை மிக தெளிவாக குழப்பி புரியவைத்திருக்கிறார் காயத்ரி அவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆனந்த்..மிக்க நன்றி..நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..:)

      Delete
  6. தெளிந்த நிலையில் குழப்பம் அடைந்தேன். குழம்பிய நிலையில் தெளிவும் பெற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. அஹ்ஹா...குழம்பாமல் தெளிவாய் கருத்திட்டமைக்கு நன்றி..தூரிகைச்சிதறலை கண்டுரசிக்க தொடர்ந்து வருவதில் தெளிவா இருங்க,,,:)

      Delete
  7. அக்கா...
    குழப்பி...பின் தெளிய வைத்து... பிறகு மீண்டும் குழப்பி... கடைசியில் தெளிவு பெற வைத்துவிட்டீர்கள்....

    இதுக்குப் பேர்தான் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறதோ....

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா..தம்பீ....இதப்படிச்சும் தெளிவா கருத்து போட்டதில் இருந்து குழம்பாம தெளிவா இருக்கேன்னு தெளிவா தெரியுது..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__