முகப்பு...

Thursday 3 November 2011

கவிக்குடும்பம்....



கவிஞனே...,
நீ
என் கரம் பிடித்த
நாள் முதலாய்
உலகம் மறந்தேன்...

கண  நேரமும் உனைப்பிரியா 
வரம் கேட்டேன் கடவுளிடம்...
பருவம் கொண்ட நாள் முதலாய்., 
பக்குவமாய் காத்திருந்தது உன்
பார்வைப் படத்தானோ….??

நாம் இருவரும் கைகோர்த்து
நாள்தோறும் கவிதை பேச….

நந்தவனமாய்
நம் வாழ்வு மணக்க....
ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
வானவில்லை வீட்டின் தோரணமாக்கி….

நிலவை விளக்காக்கி,
விண்மீன்களை பொருட்களாக்கி...

கவிதை பேசி களைத்து போன  நீ
குடிப்பதற்கு கங்கையைக் கொணர்ந்து...

குளிப்பதற்கு குற்றால நீர்வீழ்ச்சியை
வீட்டிலமைத்து...

பசியாற செந்தமிழில் 
கவிதை சமைத்து...

வெண்முகிலை மெத்தையாக்கி..
தென்றலை சாமரமாக்கி...

உன் கவிதை சொல்ல,
அந்தக் கண்ணனையும், கலைமகளையும்
குழந்தைகளாய்ப் பெற்றெடுத்து,
குதூகலமாய் குடும்பம்
அமைப்போம்...

கண்ணனையும்,கலைமகளையும்
குழந்தைகளாய் அடைந்த நீ..

அவர்களின் மழலையில் 
நீயும் குழந்தையாகி குதூகளித்து
என்னையும் களிப்படையச் செய்கிறாய்..

அன்று,
கற்பனையில் கல்லையும், புல்லையும்..
கவிதைகளாக்கியவன்..

இன்று,
குழந்தைகளின் சத்தம், முத்தம்,
சிரிப்பு, அழுகை, நடை,தூக்கம்...
என அனைத்தையும்
காவியமாய் மாற்றுகிறாய்..
கற்பனையில்  கவிதையமைத்த உனக்கு
இன்று.,
கடவுளே குழந்தைகளாய் கிடைத்தபின்
காவியமாக்காமல் விடுவாயா....??

கவிஞனும் நீயே....
என் காவியத்தலைவனும் நீயே....

9 comments:

  1. இன்று.,
    கடவுளே குழந்தைகளாய் கிடைத்தபின்
    காவியமாக்காமல் விடுவாயா....??
    என்னது காயு பின்னுறீங்க. காவியம் ஆகும் காவியதலைவிக்கு எங்களது அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா...தொடர்ந்து ஊக்கமளிக்கவும்..

    ReplyDelete
  3. நீலக் கனவிற்கு தமிழ் பூசி, திகட்டா சிந்தனை சேர்த்து அமுது படைக்குமொரு முயற்சிக்கு பாராட்டுக்கள் காயத்ரி. கனவினைக் கூட பெரியோர் படைப்பாக்கினர் காரணம், ஒரு நல்லவளின் கனவு இத்தனைப் புனிதம் என்று காண்பிக்கவே. நீங்களும் உங்களின் புனிதத்தை காடுமொரு பாடலை கனவை மனம் கொல்லைகொள்ள இயற்றினீர்கள். மேலும் பல படைப்புக்களால் இத்தளம் சிறந்தோங்கட்டும்.. மிக்க வாழ்த்தும் அன்பும்...பாராட்டுக்களும் காயித்ரி!

    பேரன்புடன்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  4. மன்னிக்கவும், நீலக் கனவல்ல, நீள கனவு என்று திருத்திக் கொள்ளவும் காயித்ரி..

    நன்றியும் அன்பும்,

    வித்யாசாகர்

    ReplyDelete
  5. தங்களின் வருகையும், வாழ்த்தும் மகிழ்வை தந்தது சகோ.வித்யா. தொடர்ந்து வருகை தந்து ஊக்கமளிக்கவும்..நன்றி..

    ReplyDelete
  6. கவிக் குடும்பம் நல்லக் கதம்பம்

    ReplyDelete
  7. சிறப்பான சிந்தனை...........
    உங்கள் வர்ணணை எனக்கு மிகவும்
    பிடித்திருக்கிறது...............:)

    ReplyDelete
  8. @Anonymous....தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழமையே...:)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__