என்னை.,
அர்ஜுனனாய் ஆக்கி பார்க்க
நினைக்கும் துரோணர் அங்கே..
அர்ஜுனனாய் ஆக நினைக்கும்
நானோ
இங்கே..
எனக்கு
பிரபஞ்சத்தையே
புரிய வைக்க நினைக்கும்
பார்த்தசாரதியும் அங்கே.
பிரபஞ்சத்தையே
அறிந்திட நினைக்கும்
நானோ
இங்கே...
என்னை.,
எனக்கு அறியவைக்க விரும்பும்.,
பார்த்தசாரதியோ
அங்கே...
என் மனமோ
சிந்தனையைத் தூண்டும்
துரோணரை நாட..
அங்கே.,
துரோணரோ.,
தன்னையறிய தவத்தில்...!!
மனத்தை பக்குவப்படுத்தும் பார்த்தசாரதியும்.,
அறிவைத்தூண்டும் துரோணருமானவன்
அருகிலேயே இருந்தால்....!!
மனம் விரும்ப.,
என்னை அர்ஜுனனாக்குவது.,
மட்டுமா துரோணரின் வேலை..?
புத்தி வினவ..!!
புத்திக்கும், மனதிற்கும் இடையில்
உழலும் என்னை..
மீட்பாரா பார்த்தசாரதியாகிய துரோணர்...?
எப்போதும் பார்த்தசாரதியும், துரோணரும் வெவ்வேறானவர் காயு, இதில் அவரவர் அவர்கள் கடமையை செவ்வெனே செய்ய வேண்டும்.. இருவரும் இங்கு ஒன்றானால் கொஞ்சம் கடினம்தான்....
ReplyDeleteநன்றி தோழி..நீங்கள் கூறுவது உண்மைதான்..இருவரும் ஒன்றானால் கடினம்தான்..இது இருவராகவும் செயல்படும் ஒருவர் பற்றிய சின்ன கற்பனை..:)
ReplyDelete