அவள் காதலுக்காய்
மலரை சுற்றும் வண்டாய் மனம் காத்திருக்க......
தாமரையிலைத் தண்ணீராய் அவள்..
வருணனுக்குத் தவமிருக்கும்
வறண்ட நிலமாய் அவன்...
வறண்ட நிலமாய் அவன்...
காத்திருப்பதும் சுகம்தானே
காதலிலே..
காலம் கனிய,
அத்திப்பூவாய் அவளும் குறுநகை புரிய
மேகத்தைக் கண்ட மயிலாய் உள்ளம்..
அவள் நெருங்கி வர..
மனம் தடுமாறுகிறது மகிழ்ச்சியில்..
தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்
மாணவனாய் உள்ளத்தில் உணர்ச்சிப் போராட்டம்..
மேகத்தைக் கண்ட மயிலாய் உள்ளம்..
அவள் நெருங்கி வர..
மனம் தடுமாறுகிறது மகிழ்ச்சியில்..
தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்
மாணவனாய் உள்ளத்தில் உணர்ச்சிப் போராட்டம்..
வீசும் தென்றலிலும் வியர்க்கும் முகம்..
மெல்லிய அச்சமும்
வாழ்க்கைக்கான ஒத்திகையும் ...
மனதில் மாறி மாறி..
அவள் இதழ் அசைவிற்காய்.,
ஏங்கும் மனம்......
கன்னியவள் காந்தப் பார்வையை வீசி
அவன் மீதான காதலை ....
நாணமுடன் நாசூக்காய் வெளிப்படுத்த...
அவன் மீதான காதலை ....
நாணமுடன் நாசூக்காய் வெளிப்படுத்த...
தேன் குடித்த நரியாய் மனம்
ஆட்டமிடுகிறது உற்சாகத்தில்...
இந்தப் பிரபஞ்சமே தனதாய் உணருகிறான்..
தன் காதல் வென்றதால்..
மெல்ல கடிதம் நீட்டுகிறாள் ..
மங்கையவள் மறையும் வரை காத்திருக்கும்
நிமிடங்களும் வருடங்களாய் உணர
இடிவிழப்போவதை அறியாதவனாய்.,
மடலைப் பிரிக்க..
உன் வயப்பட்டு வாடும் மனம்
தன்வயம் இழக்கத் தவிக்கிறது..
ஊமை கண்ட கனவாய்..
காலத்தின் கோரப்பிடியில் கைதியாகி..
இருதலைக்கொள்ளி எறும்பாய் பரிதவிக்கும்.,
எனை மறப்பாய், மன்னிப்பாய் என் மனமே..!!
காதல் வென்றதும், மரித்ததும் அன்றே..
இந்தப் பிரபஞ்சமே தனதாய் உணருகிறான்..
தன் காதல் வென்றதால்..
மெல்ல கடிதம் நீட்டுகிறாள் ..
மங்கையவள் மறையும் வரை காத்திருக்கும்
நிமிடங்களும் வருடங்களாய் உணர
இடிவிழப்போவதை அறியாதவனாய்.,
மடலைப் பிரிக்க..
உன் வயப்பட்டு வாடும் மனம்
தன்வயம் இழக்கத் தவிக்கிறது..
ஊமை கண்ட கனவாய்..
காலத்தின் கோரப்பிடியில் கைதியாகி..
இருதலைக்கொள்ளி எறும்பாய் பரிதவிக்கும்.,
எனை மறப்பாய், மன்னிப்பாய் என் மனமே..!!
காதல் வென்றதும், மரித்ததும் அன்றே..
பிரபஞ்சமே "தனதாய்” உணர்ந்தவன்.,
பிரபஞ்சத்தில் "தனியாய்" உணருகிறான்...
இடியுடன் கூடிய மழையாய்....
பிறப்பும், இறப்பும் ஒரே கோட்டில்
மகிழ்வதா? அழுவதா ??
செய்வதறியாது...
இரட்டை உணர்ச்சியில் துடிக்கும் இவனை..
சமாதானப்படுத்துவது யார்? எப்படி??
எனக்குத் தெரியலைங்க அக்கா
ReplyDelete