கதிரவன் கண்விழிக்கும் முன் எழுந்து,
பூமியவள் மனம் குளிர நீர் தெளித்து,
வண்ணக்கோலத்தால் அலங்கரித்து...
கடலை மாவும், கஸ்தூரி மஞ்சளின்
நறுமணமும் வீச...
இன்னமும் காயாத ஈரக்கூந்தலிலிருந்து சொட்டும்
நீரால் ஈரமான ரவிக்கையும்,
குங்குமப் பொட்டும், மயக்கும் மல்லிகையின் மணமும்
சிலிர்பூட்ட....
சாம்பிராணியின் புகையும்,
மணியோசையுமாய்...
புன்னகையுடன் அன்பாய் என்னை
அவள் எழுப்ப புன்னகைத்தபடி விழிக்கிறேன்...
அலைபேசியின் அலறல்..
அழகு நிலையத்தில் அவள் காத்திருக்கிறாளாம்...!!
நான் அழைத்து வருவதற்காக...
ஓ! நான் கண்டது கனவா??!!

ஹா ஹா ஹா, அக்கா கவிதை எழுதுவதில் நகைச்சுவையுடன் சிந்திக்கக் கூடிய கருத்துகளையும் சொல்ல ஆரமிச்சிட்டாக, கவியில் முதுநிலை
ReplyDeleteநன்றி தம்பி....
ReplyDelete