முகப்பு...

Sunday 19 January 2014

நித்தமும் மார்கழி...!!!


வண்ணக்கலவையில்
வகை வகையாய் கோலமிட்டு
வீதிமகளை அலங்கரித்த
காரிகைகள் காணவில்லை..!

பூமித்தாயை அலங்கரிக்க
மார்கழி போதுமென
ஐயாறு திங்களுக்குள்
அடக்கியது யாரோ..?

அழகுக்கு அழகுசேர்க்க
ஆயுளும் போதாதே..
பசுஞ்சாணி சேர்த்தே
நித்தமும் நீர்தெளித்து
பளபளக்கும் வாசலிலே
வெண்மைப் பளிச்சிட
அரிசிமாக்கோலமிட்டு..

வண்ணக்கலவையினால்
வானவில்லும் பொறாமைகொள்ள
ஈராறு மாதமும்
இன்முகத்துடன்
வாசலை அலங்கரித்தே
புவிதனை மகிழ்விக்க
பூவையரே புத்துணர்வுடன்
வாருமிங்கே..! 

13 comments:

  1. கோலமிட புத்துணர்வுடன் கூடிய புதுமையான தங்களின் அழைப்பு கோலம் போலவே அழகாக அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...நன்றியும், மகிழ்ச்சியும் தங்கள் வாழ்த்திற்கு.._/\_

      Delete
  2. எல்லாம் இளம்பெண்களின் வேலை என்றுதானே வைத்திருந்தது நம் தமிழ் மரபு? இப்ப இளம்பெண்களின் வேலை பரந்து விரிந்து போனதில் கோலம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஒழுங்கா ஆண்களும் போடக் கற்றுக்கொண்டிருக்கலாமில்ல? நலல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:) உண்மைதான்..எந்தக்கலையும் அனைவருக்கும் பொதுவானதே..:)

      Delete
  3. அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அக்கா சட்டை அழகா இருக்கே...

    கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி

    வண்ணக்கலவையினால்
    வானவில்லும் பொறாமைகொள்ள
    ஈராறு மாதமும்
    இன்முகத்துடன்
    வாசலை அலங்கரித்தே
    புவிதனை மகிழ்விக்க

    என்ன வரிகள்.. சிறப்பாக உள்ளது தொடர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__