வார்த்தைகளால் கொல்லும் மனம்..
வார்த்தைகளால் கொள்ளும் மனம்..
வார்த்தைகளால் கொள்ளும் மனம்..
*****
வார்த்தையால் ஏற்படும் காயங்களுக்கு
மௌனத்தால் மருந்திடும்
மனம்.
மௌனத்தால் ஏற்படும் காயங்களுக்கு
வார்த்தையால்
மருந்திடும் மனம்.
*****
*****
தன் உணர்விற்கு மதிப்பளித்து..
பிறர் உணர்வை எரிக்கும் மனம்..
பிறர் உணர்விற்கு மதிப்பளித்து
தன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..
*****
*****
அன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..
கோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..
*****
சோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும் மனம்..
மகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும் மனம்..
*****
மனங் கூறிடும் மந்திரம் நன்றே
ReplyDeleteஇனங் கண்டிடு இன்று!
சிந்தனைக்குச் சிறப்பான கவிதைகள் தோழி!
வாழ்த்துக்கள்!
த ம.1
அருமை தோழி...நன்றி..:)
Deleteமனித மனத்தின் முரண்பாடுகளை அழகான கவிதை அக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழர்
Deleteசிறப்பான சிந்தனை.....
ReplyDeleteத.ம. 3
மிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம்!
ReplyDeleteமனம் பற்றிய மகிழ்வான மதிப்பு!
வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
த ம.4
வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)
Delete//பிறர் உணர்விற்கு மதிப்பளித்து தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்!..// இது நன்றாக இருக்கின்றதா!...
ReplyDeleteவான் மழைத் தூறல் தனைப் போல்
வார்த்தைகளின் தூறல்!...
அருமை! .. அருமை!..
வாங்க ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..:) //தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்!.// மிகவும் நன்று..:)
Delete