எனதன்பு தூரிகை கண்ட முத்துக்களுக்கு
நான்காவது நாளின் மூன்றாவது நாள் மனம்கனிந்த வணக்ககம். _/\_
இன்று
நம்ம விசு சாருக்கு வேற சூட்டிங்க் இருக்காங்க.. அதான் தூரிகையின் உங்கள்
காயத்ரியாகவே அறிமுகப்படுத்திடலாம்னு இருக்கேன். அதுமட்டும்
இல்லைங்க...உங்க மேல உள்ள அன்பினாலயும்தான். 2 நாளா உங்களுக்கெல்லாம் தல சுத்து
சுத்துனு சுத்தியிருக்கும். இன்னிக்கு கொஞ்சம்
ஓய்வா இருங்க..அதுக்காக இந்தப்பதிவ படிக்காம ஓய்வெடுத்திடாதீங்க..படிச்சு கருத்து
சொல்லுங்க. விசு சார்கிட்ட இருந்து இன்னிக்கு ஓய்வு. வேண்டுமானா காலை நேரத்துல காயத்ரியின் ஒரு
தத்துவத்தோட துவங்கலாமா அறிமுகத்த...??
அதுக்காக
தத்துவத்திற்கும் இந்த அறிமுகத்திற்கும் தொடர்பு படுத்தி
பார்த்திடாதீங்க...அப்புறம் உங்க நிலைமைய என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியல..
தத்துவம்
படிச்சிட்டு(தத்துவம் சொன்னா ஆராயக்கூடாது..அனுபவிக்கனும்) மேற்கொண்டு அறிமுகங்கள
படிச்சிட்டு கடைசியா ஒரு முரண்பட்ட சிந்தனைய படிச்சிட்டு இன்றைய நாள் முரண் இல்லாம, இனிய நாளாக அமையட்டும். வாழ்க வளமுடன். :) தத்துவம்
நம்மை நாம்
உணர்வுதற்கு முற்படும் முன்பே,
உணரப்படவேண்டிய பலவற்றை
உணராமலே
கடந்துவிடுகிறோம்..
உணர்ந்ததை
உணர்வுதற்கு முற்படும் முன்பே,
உணரப்படவேண்டிய பலவற்றை
உணராமலே
கடந்துவிடுகிறோம்..
உணர்ந்ததை
உணர்ந்ததாக
உணர்வதற்குள்
காலம் கடந்துவிடுகிறது வாழ்வில்.
உணர்வதற்குள்
காலம் கடந்துவிடுகிறது வாழ்வில்.
சரி வாங்க இன்றைய
மலர்களின் மணமறிவோம்..
அனிதா ராஜ் அவர்கள் மனதில்
உதிர்க்கும் தமது எண்ணங்களைஎண்ண ஓவியத்தில் தீட்டியிருக்கிறார். கதை, கவிதை
மட்டுமின்றிஅனுபவங்களை மலரும் நினைவுகளாய்ப் பகிர்ந்து நம்முடைய நிகழ்வுகளுடன்
தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் தன் எண்ணங்களை எழுத்துக்களாய்
வடித்திருக்கிறார். வெளியூரில் இருக்கும் தாய்வீட்டிற்கு மகள் வரும் சமயம்
எத்தனையெத்தனை வேலைகளையோ நினைத்து வர அம்மா வீடு அனைத்தையும் மறக்கச்செய்யும். மலரும் நினைவுகள் - 4
//“நிறைய வேலை இருக்குனு சொன்னியே” - அம்மா
“எல்லாம் அடுத்தமுறை வரும் போது
பார்த்துக்கலாம்மா” இது ஒவ்வொருமுறை நான் செல்லும் போது பரிமாறப் படும் சம்பாஷைனைகளில்
ஒன்று.//
தோழி அனிதா ராஜ் தங்கள் எண்ணங்களை ஓவியமாய்த் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..
*****
பாண்டிப்பிரியன்(Pandi Priyan) தென்மேற்குப் பருவக்காற்றில் இருந்து மலையின் அடுத்த பக்கம் வரை
சம்பவங்களின் சேகரிப்பாய் இந்த நேற்றைய ஈரம்... தளம். முகநூலில் மட்டும் தன் சிந்தனைகளைப்
பகிர்ந்துவந்த இவர் புதிதாக வலைத்தளம் துவங்கியிருக்கிறார். கிராமத்து மணம் வீசும் படி யதார்த்தமான நிகழ்வுகளை எடுத்துரைக்கும்
இவரின் நான்
கிராமத்தாண்டே பதிவு கிராமத்து
ஆரோக்கிய வாழ்க்கை முறையினை அழகாய் எடுத்துக்கூறும் விதமாய் அமைந்துள்ளது.
//வெக்கங்கெட்ட விவசாய நாடுல
விவசாயிய மதிக்கிறதில்ல
எம் பொழப்பு உனக்கு அதிசயமா இருக்குது
உன்ன கண்டா எனக்கு புதுசா தெரியிது
நான் கிராமத்தாண்டே
என் சொல்லு உனக்கு புரியாது//
எம் பொழப்பு உனக்கு அதிசயமா இருக்குது
உன்ன கண்டா எனக்கு புதுசா தெரியிது
நான் கிராமத்தாண்டே
என் சொல்லு உனக்கு புரியாது//
நாமும்
சென்றுதான் பார்ப்போமே எப்படித்தான் நோயின்றி நம் கிராமத்தினரின் வாழ்க்கை முறைப்
பற்றிக்கூறுகிறார் என..:)
தம்பி பாண்டியின் நேற்றைய ஈரத்தை என்றும் அவரது பதிவுகளினால்
குளிர்விக்க வாழ்த்துகிறேன்.
*****
ஆத்மாவின் பெயருக்கேற்ப அவரது சுய அறிமுகமே அசத்தல்) சிட்டுக்குருவி கவிதை, கட்டுரை, புகைப்படம், அனுபவம்
எனப்பல்சுவையாய் அமைந்திருக்கிறது இவரது தளம். " வன்புணர்வு " குற்றமல்ல என்ற கட்டுரையில் இன்றைய நிகழ்வுகளையும் அதனால் ஏற்படும்
விபரீதங்களையும் கூறியுள்ளார். சற்றே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விசயம்தான்.
கவிதையும் உணர்வுபூர்வமாகவே கொடுத்துள்ளார் .கவிதைத்
திருடர்கள்.
//கவிஞர்கள் பற்றி கேள்விப்
பட்டிருக்கிறேன்
அவர்கள்
மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
(அப்படியா..??!!)
அவர்களின்
எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க
யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப்
பட்டேன் யாரோ எப்பவோ
என்
எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக்
கேட்டு நானும்
கவிஞனாய்
இருப்பதையெண்ணி// அருமையான வரிகள். நண்பர்ஆத்மாவின் சிட்டுக்குருவி, சிறகடித்துப்பறக்க வாழ்த்துகள்.
******
ஒளியவன் நல்ல நண்பர்களையும் கொஞ்சம்
கவிதைகளையும் சேமித்து வைத்திருருக்கும் இவரின் ஒளியவனின் சிறுகதைகள் தளத்தில்
அறிவியல் புனைவுகள், படிப்பினை,கடந்தகால குறிப்புகள், வலி எனப் பல்வகைப்
பதிவுகளைப் பதிந்திருக்கும் இவரின் தளத்தில் சத்தமின்றிப்
பூக்கும் பூக்கள்...சிறுகதை மூலம்
இவர் அம்மாவிற்கு எழுதியிருக்கும் கடிதம். ///தமிழில் எழுதப்பட்ட அனைத்து
காதல் தோல்வி கவிதைகளும் மனப்பாடமே ஆகிவிட்டது ஒரு சமயம். நானும் எழுதினேன்
அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களின் வாசத்தையும் மோசத்தையும் விரல் முனை வழியே
இணையத்தில். வாசித்தவர்கள் பாராட்டினார்கள், அதில் ஓடிக் கொண்டிருக்கும் வலி அறியாமல்.///
கடிதத்தில்
என்னதான் சொல்லி முடித்திருக்கிறார் தன் அம்மாவிடம் சென்று பார்ப்போம். தோழர் ஒளியவனின் எழுத்துக்கள் ஒளிமயமாய்த் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
********
முரண்பட்ட சிந்தனைகள்
காலத்தால் ஏற்பட்ட
காயங்கள் மனிதர்களாலும்,மனிதர்களால் ஏற்பட்ட காயங்கள் காலத்தாலும் ஆற்றப்படுகிறது... :)
அறிமுகமாகும்
அனைத்து மலர்களும் என்றும் நறுமணம் வீச வாழ்த்துகள். நண்பர்களுக்கு, அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள்
எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.
அடுத்த
பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__