முகப்பு...

Tuesday 11 February 2014

தேடல்...

அடர்ந்த இருள் 
அமைதியைத் தன்வசப்படுத்தியிருக்கும் 
அதிகாலை நேரம்...
கன்னம் தழுவி மனதை வருடும்
குளிர்ந்த தென்றலுடன்
பயணிக்கும் மலரின் மணம்...
நட்சத்திரமில்லா ஆகாயம்..
சலனமில்லா வீதி..
சிந்தனைகள் சிறகடித்து
எண்ணங்களை மெருகேற்றி..
மனச்சாட்சியிடம் நேர்காணல்..!!

அத்தனையும் அனித்தியமென உணர்த்த...
காலை நேரத்தைக் கைதுசெய்து 
இருளையகற்றி..
தென்றலைத் துரத்தி..
ஆகாயத்தில் ஆதவன் 
ஆட்சியமைக்க..!!

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
வாகனங்கள்..
உதிர்ந்த மலராய் உறக்கத்தில் நடக்கும்
பள்ளிக் குழந்தைகள்..!!
மனச்சாட்சியின்  நேர்காணல்
ஒத்திவைக்கப்பட்டு
அடுத்தடுத்து தொடரும் 
அன்றாடப்பணிகள்..!!

எது அனித்தியம் எது சத்தியம்
எடுத்துரைப்பது யார்..?
எடுத்துக்கொள்வது எப்படி..
எத்தனையெத்தனை கேள்விகள்
எழுந்திடினும்..
விடையறியாமலே விடிகிறது
ஒவ்வொரு நாளும்..!!

13 comments:

  1. அதிகாலை நேரம்..
    அன்றாயப்பணிகளை
    அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  2. வாழ்க்கையிம் பிடிப்பை ஏற்படுத்துங்கள்
    நம்பிக்கையை வையுங்கள்
    ஒவ்வொரு விடியலும் விடையுடன் வரும் :)

    ReplyDelete
  3. அவ்வளவு தான் ஒரு நாள்...!

    ReplyDelete
  4. வணக்கம்
    சகோதரி

    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இப்படித்தான் விடை யறியாமலே விடிகிறது ஒவ்வொரு நாளும் ... அற்புதமான கவி வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அக்கா கவிதை அருமை...
    உண்மைதான் விடை தெரியாமல்தான் விடிகிறது ஒவ்வொரு நாளும்...

    ReplyDelete
  6. அற்புதமான ஆழமான கருத்துடன்
    கூடிய கேள்வியை எழுப்பிப் போகும்
    கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__