Sunday, 1 September 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை பொதுநூலகதிறப்புவிழா - அழைப்பிதழ்


தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பான வணக்கம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். இந்த அழைப்பிதழையே தங்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகம் அனுப்பிவைத்திருக்கும் தனித்த அழைப்பாக ஏற்றுக்கொண்டு, விழாவிற்கு வருகை புரிந்து நூலகதிறப்பு விழாவினை சிறப்புடன் நடத்திக்கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழ்க்குடிலின் நூலகம் மற்றும் அலுவலகம் அமைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும், நூல்கள் சேகரிப்பதில் தமது பங்களிப்பையும் நேரம் மற்றும் உடல் உழைப்பையும் கொடுத்துவரும் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது தொடர்ந்த ஆதரவினையும், பங்களிப்பையும் தமிழ்க்குடிலுக்கு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறோம். தமிழ்க்குடிலின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் http://tamilkkudil.blogspot.in/ இணைந்து கொண்டு, தமிழ்க்குடிலுக்கு தங்களது ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி என்றும் உடனிருக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

8 comments:

  1. வாழ்க தமிழ்! வளர்க தமிழ் என வாழ்த்தி மகிழ்கின்றேன்!..

    ReplyDelete
  2. வாங்க தோழர்...தங்கள் வாழ்த்து வளமாக்கட்டும். தமிழ்க்குடில் அறக்கட்டளை வலைத்தளத்தில் இணைந்துகொண்டு தொடர்ந்த ஆதரவு அளிக்கவேண்டுகிறேன்..

    ReplyDelete
  3. Replies
    1. மகிழ்ச்சி தோழர்...தாங்களும் விழாவில் கலந்துகொள்ளவும்..:)

      Delete
  4. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
    பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தகவலுக்கும் நன்றி தோழர்..தங்கள் வாழ்த்து எம் எழுத்துக்களை மெறுகேற்றட்டும்..நன்றி.._/\_

      Delete
  5. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
    பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தகவலுக்கும் நன்றி தோழர்..தங்கள் வாழ்த்து எம் எழுத்துக்களை மெறுகேற்றட்டும்..நன்றி.._/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__