ஆயிரம் அன்புச்சொற்களையும்
மறக்கச்செய்கிறது
அலட்சியமாய் உதிர்க்கப்படும்
ஒற்றை கடுஞ்சொல்...
--
மகிழ்வுகளைத் தொலைத்து
வலிகளை வாங்கிக்கொள்கிறோம்
சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
நம்மையறியாமலேயே ..
வலிகளை வாங்கிக்கொள்கிறோம்
சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
நம்மையறியாமலேயே ..
--
கலைந்துசெல்லும் மேகமெனும்
வாழ்க்கைப்பயணத்தில்..
தானே நிரந்தரமென
தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மனம்..!!!
---
---
//ஆயிரம் அன்புச்சொற்களையும்
ReplyDeleteமறக்கச்செய்துவிடுகிறது ஒற்றை கடுஞ்சொல்..//
கடுஞ்சொற்களும் நம் நன்மைக்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளன என பாஸிடிவ் ஆக எடுத்துக்கொண்டால், ஆயிரம் அன்புச் சொற்களையும் மறக்க முடியாது தானே!
பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க ஐயா...உண்மைதான்..கூறப்படும் கடுஞ்சொல் நன்மைக்காக இருக்கும்பட்சத்தில்..வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_
Deleteஅறிந்தும் அறியாமலும் அறியவிரும்பாததுமாக நல்ல சிந்தனை! அருமையான கவிப் படைப்பு!
ReplyDeleteஅவ்வளவும் நூறுவீதம் உண்மை!
வாழ்த்துக்கள்!
வாங்க தோழி..மிக்க நன்றி..:)
Deleteமுத்தான குறுங்கவிதைகள்! முதல் கவிதை மிகச் சிறப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்...:)
Deleteமகிழ்வுகளைத் தொலைத்து
ReplyDeleteவலிகளை வாங்கிக்கொள்கிறோம்
சிறு சிறு எதிர்பார்ப்புகளில்
நம்மையறியாமலேயே .///
நன்றாக சொன்னீர்கள்.
அருமையான கவிதை.
எதிர்பார்பு இல்லாமல் இருந்தாலே .ஏமாற்றம் என்ற வலி வராது.
--
வாங்க தோழமையே..நன்றி..:)
Deleteஅறிந்தும் அறியாமல்.
ReplyDeleteஅறியாத சில அறிய விசயங்களை அறியச்செய்திருக்கிறது
இந்த அறிந்தும்,அறியாமல் பதிவு.
கவிகாயத்ரியின் சிந்தனையில் சிக்கிய மிக அற்புதமான படைப்பு இது.
மிக்க நன்றி ஆனந்த்...:)
Delete