முகப்பு...

Saturday, 7 September 2013

பூ சிந்தும் கண்ணீர்..!!அருகேயிருக்க ஆசைப்படும் மனதை
அணைப்போடுகிறேன்...
காலம் கொடுக்கும் காயத்தோடு
காதல் கொடுக்கும் காயங்கள்
அதிகரிக்காமல் தடுக்க...!!
வெட்ட வெட்ட துளிர்க்கும் தளிர்களாய்
தொலைவிலிருந்து
துவளாது வந்தடையும்
வேதனையை அள்ளித்தரும்
வேண்டாத வார்த்தைகளைத் தவிர்க்க.....!!
ஒருபக்கம் வார்த்தைத் திராவகத்தால்
மனம் கறுக..
மறுபக்கம் உன்மீதான மாறாதகாதல்
உயிர்ப்பூவை மலரச்செய்கிறது....
மலர்வதற்காக கறுகுகிறதா..
கறுகுவதற்காக மலர்கிறதா..
என் காதல்பூ..!!!??
காலத்திடம் கேட்டு காத்திருக்கிறேன்...||

8 comments:

 1. உன்மீதான மாறாதகாதல்
  உயிர்ப்பூவை மலரச்செய்கிறது...//

  மலரட்டும் அன்பு.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழமை...மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)

   Delete
 2. //மலர்வதற்காக கறுகுகிறதா..
  கறுகுவதற்காக மலர்கிறதா..
  என் காதல்பூ..!!!??//

  அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. காதலில் மட்டுமா உயிர்ப்பூ ,உங்கள் கவிதையிலும் தெரிகிறதே உயிர்ப்பு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:) _/\_

   Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__