மனசெல்லாம் நிறஞ்சிருக்கும்
மவராசன ஓங்கிட்ட
மனம் திறந்து பேசத்தான்
மாசக்கணக்கா துடிக்கிறனே..
மனந்திறக்க நினைக்கையில
மனசு நடுங்குதய்யா..
யே நெஞ்சுக்குள்ள நெறஞ்ச ஒன
நேர்ல எப்படி காட்டிடுவேன்...
அதிகாலை கோழிகூவையிலே
அத்தான் ஓன் நினைப்பு..
வாசக்கூட்டி கோலம்போடயிலே
மையப்புள்ளியா நிக்கறியே..!!
காப்பித்தண்ணி வக்கயிலே
சிரிக்கும் உம்முகந்தான்
பால்ல பொங்குதய்யா...
ஆத்துல குளிக்கையில
குளிரும் நீரா எனத்தீண்டறியே..
சோறு உங்கயிலே
நான் தானா சிரிக்கறனே...
உம்முகம் நெனச்சு நெனச்சு
உறக்கம் தொலச்சேனே
உம்மனசு தெரியத்தான் துடிச்சனே...
பாக்கும் பொருளெல்லாம்
நீயாத் தெரியறியே..
மனசு நெறஞ்ச மவராசன்
நீயே ஏமனச படிச்சுப்பாருமய்யா..!!
பாவிமனசு ஒனநினைச்சே
பயித்தியம் பிடிக்குதய்யா..
ஏமனசு பாறையாகிப் போகுமுன்னே
நா உசிரா நினப்போனே
ஒம்மனச சொல்லுமய்யா...
சொல்லியவிதம் நன்றாக இருந்தது
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே...:)
Deleteகாதல் உணர்வை தத்த்ரூபமாகச் சொல்லும்
ReplyDeleteஅருமையான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கள் எமது எழுத்தை வளர்க்கட்டும்..:)
Delete:):)
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteவரிகளுடன் இளையராஜா இசை சேர்ந்தால் மீண்டுமொரு அன்னக்கிளிதான்
உங்களுக்கும் உங்கள் அன்புக்குடுமத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றியும்,மகிழ்ச்சியும்..தங்களுக்கும் எமது மனம் கனிந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.. என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் தங்கள் இல்லத்தில்..:)
Delete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே.தங்களுக்கும் எமது மனம்கனிந்த வாழ்த்துக்கள்..
Deleteகிராமத்துக்குரலில் கவிதை சொல்ல முயன்ற நல்ல முயற்சி... ஆனால் நிறைய திருத்தங்கள் தேவை... இன்னும் கொஞ்சம் முயலுங்கள்... கிராமத்துநடையில் கவிதை சொல்ல வரிக்கு வரி எதுகை மோனை ரொம்ப அவசியம்... கவிதையை எழுதிவிட்டு பலமுறை மீண்டும் மீண்டும் படித்து எதுகை மோனைக்காக திருத்தினீர்களேயானால் பக்கா கிராமத்து நடை கவிதை ரெடி... மேலே கூறியது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே... உடன்பாடில்லையெனில் உதறித்தள்ளுங்கள்... மற்றபடி குறைகூறும் நோக்கமில்லை எனக்கு... வாழ்த்துக்கள்
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பிறகு வருகை..மகிழ்ச்சி தோழரே..கிராமத்து நடையில் எமது முயற்சியிது..தங்கள் ஆலோசனைக்கு நன்றி..நிச்சயம் கருத்தில் கொள்கிறேன். குறைகளை சுட்டிக்காட்டுவதின்மூலம் எமது எழுத்து மெருகேறும்..எனவே உதறித்தள்ளவேண்டியதில்லை..நன்றி.:)
Deleteவட்டார மொழியிலே காட்டாறாக பொழிகிறது கிராமத்து மனம்! அருமை அருமை!
ReplyDeleteவாங்க தோழர்...மிக்க மகிழ்ச்சி.:)
Deleteஉங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
ReplyDeleteகாண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html
தோழமையின் வருகைக்கு நன்றி. எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும். வாழ்க வளமுடன்.
Deleteகிராமிய மொழியிலே அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)
Delete