முகப்பு...

Tuesday, 11 December 2012

புதுமைப்பெண்..!!??


மஹாகவி சுப்பிரமணிய
பாரதியாரின் 130வது பிறந்த தினமான இன்று எமக்கு எழும் சந்தேகம்..

புதுமைப்பெண் என்பவள் யார்.....?
புதுமையென எதைக்குறிப்பிடுகிறோம்..
பாரதிவிரும்பிய புதுமைப்பெண் எப்படியிருக்கவேண்டும்
அதற்கான இலக்கணம்.....?

இதைப்பற்றி சற்று விளக்கமளிக்கவும்..தோழமைகளே..

ஒருபுறம் இன்றும் செக்குமாடாய் வீடேய் கதியெனவும், அதைத்தாண்டி சிந்திப்பதே பாவம் எனவும் அடிமைப்பட்டுக்கிடக்கும் பெண்கள்...
அதைத்தாண்டி சிந்திப்பவர்களை நிந்திக்கும் ஆண்கள்..

ஒருபுறம் புதுமை,புரட்சி என உலகமே வீடென
வீட்டைத்துறக்கும் பெண்கள்...

ஒருபுறம் நாகரீகமோகத்தில் அரைகுறை ஆடையே புரட்சியென நினைக்கும் பெண்கள்...

ஒருபுறம் விண்ணிற்கு செல்லும் பெண்கள்..
ஒருபுறம் செய்யும்வேலை ஒன்றேயெனினும் ஆணைவிடக் குறைந்தகூலி வாங்கும் பெண்கள்..

வார்த்தை சாட்டையால் சாடும் சமூகத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள்...

ஒருபுறம் சாதனையாயிரம் படைத்திடினும் சாடலை மட்டுமே பரிசாய்ப்பெறும் பெண்கள்...

ஒருபுறம் சாதித்ததற்கு சங்கேதபாசையில் விமர்சிக்கப்படும் பெண்கள்...

பல்வேறு வேடமேற்கும் இவர்களில் பாரதி விரும்பிய புதுமைப்பெண் யாரோ...??

புதுமைப்பெண்ணைக்
கண்டிடத்துடித்தவனே
புதுமைப்பெண் யாரென அறியாமலே
புரட்சி பேசித்திரியும் பேதையிவளின்
பேதமையைக்காணாயோ...??!!!


7 comments:

  1. புதுமைப்பெண்ணைக்
    கண்டிடத்துடித்தவனே
    புதுமைப்பெண் யாரென அறியாமலே
    புரட்சி பேசித்திரியும் பேதையிவளின்
    பேதமையைக்காணாயோ...??!!!

    பாராட்டுகள், அப்படியே பாரதியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி..

      Delete
  2. நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்! விடை தெரியாமல் விழிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. பாரதியின் காலத்தில் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருந்தார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு சாதாரண ஒரு நிலைக்குக் கொண்டுவருவதை புதுமைப் பெண்ணாக கூறியிருக்கலாம்...

    ஆனால் இன்றிருக்கும் பெண்கள் எல்லோரும் புதுமைக்கும் மேலாக பல படி சென்று விட்டார்கள் இப்போதிருப்பது பாரதி சொன்ன புதுமைப் பெண்கள் அல்ல...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__