முகப்பு...

Tuesday 9 October 2012

கருத்த மச்சான்...

நெஞ்சத்தில குடிகொண்டு
நெஞ்சுக்குள்ள காதலத்தான்
நீ விதைச்சு
நித்தமும் தாலாட்டுப் பாடி என்ன

கண்ணுறங்க வைக்கும்
என் ஆச மச்சான்...
கதிரவனும் உதிக்கும் நேரமாச்சு
கண் திறந்து பாரு மச்சான்
என் ஆச கருத்த மச்சான்...!!

காதல் முத்தத்த
கன்னத்துல கொடுக்கசொல்லி
வீசும் வேப்பங்காத்த
விரசாக தூதனப்பி
உன் எண்ணத்ததான்
எழுப்பிடறேன்
எழுந்திருச்சு வா
என் ஆச கருத்த மச்சான்..

வெரசாக நீயெழுந்து..
அன்னாட வேலையத்தான்
வெவரமா பாத்திடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

உடம்பத்தான்
கட்டுக்கோப்பா வச்சுக்கிட
நீச்சத்தண்ணி நீ குடிச்சி
நேரத்தோட உடற்பயிற்சி செய்யவேணும்
என் ஆச கருத்த மச்சான்....!!

கொல்லப்புறம் போயி நீயும்
கொடிமலரை பறிக்கையிலே
பூவை என்ன நெஞ்சுக்குள்ள
பூவாக நினைக்கோணும்
என் ஆச கருத்த மச்சான்...

தேனுறிஞ்சும் வண்டகண்ட
நீ
தேன் குரலால் என்ன
அழைச்சிடனும்
என் ஆச கருத்த மச்சான்..!!


ஆத்துத்தண்ணில
அமுங்கிக்குளிக்கையில
கரையோரம் நிக்கும்
என்ன அப்பப்போ
ஓரக்கண்ணால
கண்டுகிடனும்
என் ஆச கருத்த மச்சான்...

ஆத்தாவை வணங்கித்தான்
வேலைக்கு கிளம்பும்
நீ...
யாரும் அறியாம
என் உள்ளம் குளிர
முத்தமொன்ன பறக்கவிடனும்
என் ஆச கருத்த மச்சான்......!!

யாருக்கும் அஞ்சாம
நீயும்
வேலயத்தான் பாத்து
நேர்மைக்கு உதாரணமா
விளங்கிடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

தப்பத்தான் தட்டிக்கேட்க
தயங்கிடாத
உம்புகழ தரணி பூரா பேசிடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

லஞ்சம் வாங்கும்
பஞ்சப்பயலுக்கு சிம்ம சொப்பனமா
விளங்கனும்
என் ஆச கருத்த மச்சான்.....

ஆறடிச்சா வூடு வந்து சேந்திடனும்
அக்கம்பக்கம் புள்ளைங்களுக்கு
அறிவுக்கண்ண திறக்க
நீயும் உதவிடனும்
என் ஆச கருத்த மச்சான்.....!!

சாதியில்லா சமத்துவ
ஊரத்தான் உருவாக்கிடவும்...
வறுமையில்லா
தேசத்தை உருவாக்கிடவும்...
வளமான உன் உழைப்பை
வஞ்சனையில்லாம நீ
கொடுக்க
உலகமே உனப் பாத்து
வியந்துபுடணும்
என் ஆச கருத்த மச்சான்....!!

இத்தனையும் செஞ்சுமுடிக்க
எம்மவராசன் நீயும்
வெரசா..
கண் திறந்து பாருமச்சான்
கதிரவனும் வந்தாச்சு...
என் ஆச கருத்த மச்சான்.....!!



8 comments:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    உங்கள் ஆசை கருத்த மச்சானைப் போல எல்லோரும் இருந்தால் நாடு வளம்பெற்றிடும்
    நல்ல கவிதை

    ReplyDelete
  2. கருத்த மச்சானுக்கு இவ்வளவு வேலைகளா தருவது...?

    அருமை... கருத்துள்ள வரிகள்... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ சகோ.நினைவில் வந்த வேலை மட்டும் சொன்னேன்..மற்றவை பிறகு கூறிக்கொள்ளலாம்..

      Delete
  3. கருத்த மச்சான் கலக்கல் மச்சான்...
    இருந்தாலும் இம்புட்டு வேலைய ஒத்த மனுசனுக்கு கொடுக்கிறது நியாயமாத் தெரியலைக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ...தம்பி..ஒருக்கா யல்லா வேலையும் கொடுக்கவேணாமேனு இன்னும் சொல்லல..எழுந்ததும் சொல்லுவேன்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__