முகப்பு...

Sunday 7 October 2012

உணரப்படாத வலிகள்...


இன்றைய வெறுப்பில்
மற(றை)ந்திருக்கும் நேற்றைய அன்பு
நினைவிற்கு வருவதில்லை...!!
******
உண்பவனுக்கு..
சோற்றில் மறைந்திருக்கும்
உழவனின் வியர்வைத்துளி  தெரிவதில்லை..
******
பூமாலையின் அழகில்
இறுக்கப்பட்டிருக்கும்
காம்புகளின் வலி தெரிவதில்லை..
******
வெண்மைநிற ஆடைக்குப்பின்
மறைந்திருக்கும்
வெளுத்தவனின் வலி
உணரப்படுவதில்லை...
 
******
நீச்சல் குளத்தில் குளிப்பவனுக்கு
குழாயடியில்
குடிநீருக்குப் போராடுபவனின்
வலி தெரிவதில்லை...
******







7 comments:

  1. சிலவரிகளில் அடங்கிய உங்கள் கவிதைகளில் உண்மைகள் மிக அழமாக இருக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன....மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் வாழ்த்திற்கு மகிழ்ச்சியும், நன்றியும்..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  2. உண்மை... உண்மை வரிகள்...

    மிகவும் பிடித்தது :

    /// உண்பவனுக்கு...
    சோற்றில் மறைந்திருக்கும்
    உழவனின் வியர்வைத்துளி தெரிவதில்லை... ///

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும்,நன்றியும் சகோ...

      Delete
  3. எல்லாமே ஆழமான அருமையான சிந்தனைகள்... இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்தது...

    இன்றைய வெறுப்பில்
    மற(றை)ந்திருக்கும் நேற்றைய அன்பு
    நினைவிற்கு வருவதில்லை...!!

    பூமாலையின் அழகில்
    இறுக்கப்பட்டிருக்கும்
    காம்புகளின் வலி தெரிவதில்லை..

    சூப்பர்...

    கவிதையை மிக சுருக்கமாக முடித்து எங்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்... இன்னமும் கூட உணரப்படாத வலிகள் நிறைய இருக்கின்றன... அதையும் எழுதியிருக்கலாம் நீங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் கருத்திற்கு நன்றி..நிச்சயம் அவற்றையும் தொகுத்து சிலதினங்களில் பதிவிடுகிறேன்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__