முகப்பு...

Wednesday 24 October 2012

வானவில்..


சோப்புநுரையில்
குழந்தைகள் ஊதிய
சோப்புக் குமிழி...


வட்ட வட்ட வானவில்லாய்
என் கன்னமும்,
எண்ணமும் வருடிச்செல்ல


உள்ளம் பூரித்து
முத்தமிட
கையில் அள்ளியெடுக்க..


அடிமைப்பட்டிருந்த வானவில்
தன்னுயிர்த் துறக்கிறது..
மற்றுமோர் வானவில்லுக்கு
மறுஜென்மம் கொடுக்கும் முயற்சியில்
குழந்தை...!!!


11 comments:

  1. அடிமைப்பட்டிருந்த வானவில்
    தன்னுயிர்த் துறக்கிறது..
    மற்றுமோர் வானவில்லுக்கு
    மறுஜென்மம் கொடுக்கும் முயற்சியில்
    குழந்தை...!!!

    சூப்பர் ஃபீல் இருக்கு கவிதையில். சிறந்த எழுத்து, சிந்தனை... அக்மார்க் கவிதை!

    ReplyDelete
  2. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

    தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம்..தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தோழமையே..

      தாங்கள் எமது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..அறிமுகப்படுத்திய விதமே மிகவும் அற்புதமாய் இருக்கிறது.

      Delete
  3. அந்தப் பருமம் என்றும் நெஞ்சில் நிற்பவைதான்
    கொண்டு சென்று விட்டீர்கள் குழந்தைப் பருவத்திற்கு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழரே..மகிழ்வான தருணமது..:)

      Delete
  4. அருமை...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    /// உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்.... தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்... ///

    தகவல் உதவி :
    http://www.bloggernanban.com/2012/10/blog-post.html

    +

    உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Vote Button வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது....

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ..தகவலுக்கு நன்றி..சரி பார்க்கிறேன்.

      Delete
  5. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்..:)தங்களது வாழ்த்து எமது எழுத்தை வளமாக்கட்டும்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__