முகப்பு...

Sunday 21 October 2012

நகரத்தில் இயற்கை…!!


தோழமைகளுக்கு வணக்கம்..இன்றைய நகர வாழ்க்கையில் முழுவதும் இயற்கை மறந்(றுத்)த நிலையில் இருந்து வருகிறோம். 

அடுக்குமாடிக்கட்டிடங்களில் வசிக்கும் நாம் சற்று இயற்கை வழிக்கு திரும்பினால் எப்படி இருக்கும் என்ற சிறு சிந்தனையை இங்கு தங்களோடுப் பகிர்கிறேன்.

பல அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் நாம் இன்று அழகிற்காக ஏதேதோ பெயர் தெரியாத பல செடிகள், மரங்கள் வளர்த்து வருகிறோம்.. கட்டிடங்களை சுற்றியுள்ள சுற்றுச்சுவற்றிற்கு அருகிலும், வீட்டின் பால்கனி எனப்படும் திறந்தவெளியிலும் வகை வகையான மரங்கள், சில பூச்செடிகள், கொடிகள், தொட்டிச்செடிகள்  என வளர்த்து வருகிறோம்.

இதையே சற்று  மாற்றி நாம் செலவழிக்கும் நேரம், பணம், நீர் இவற்றை நமக்கு உபயோகப்படும் வகையில் மாற்றியமைத்தால் என்ன..?

அடுக்குமாடிக்குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்களும், குடியிருப்போரும் ஒருங்கிணைந்து செயல்படின் நடைமுறைப்படுத்துவது  சாத்தியமாகும்.   குடியிருப்பின் சுற்றுப்புறங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள் தவிர்த்து வில்வம், வாழை, கொய்யா, பப்பாளி,வேம்பு போன்ற மரவகைகளும், செம்பருத்தி,கொழக்கட்டை மந்தாரை, ரோசா, மல்லி, சங்குப்பூ போன்ற மலர் வகைகளும் பயிரிடலாம்.  வீட்டிற்கு உபயோகமாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகவும், உணவிற்கு உபயோகமானதாகவும்  விளங்கும். இதுபோன்ற  மரங்கள்,கொடிகள், செடிகள்  நிறைய வளர்த்து குடியிருப்போர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.

மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடலாம்.  நலச்சங்கம்தோட்டம் பராமரிப்பதற்கென ஒருவரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கி அங்கு விளையும் காய்கறிகள், கனிகள் இவற்றை குடியிருப்போரிடம் விற்று அதன் சிலவுகளை சரிசெய்யலாம்.. குடியிருப்பின் ஒரு இடத்தில் உரம் தயாரிக்கவென இடம் ஒதுக்கி வைக்க வேண்டும்.  குடியிருப்போர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என சிரமம் பார்க்காமல் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை அதற்கான இடத்தில் சேர்க்க நமக்கு உரமும் சிலவின்றி கிடைக்கும்.  சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க உதவலாம்.  இயற்கை முறையில் நமது கண்காணிப்பில் நாமே விரும்பி பயிரிடும் காய்கறிகளையே குடியிருப்போர்கள் அனைவரும்  வாங்கி உபயோகிக்க உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.  நம்மை சுற்றி பசுமையாகவும் காட்சியளிக்கும்.  சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் போன்றவற்றை தடுக்க நம்மாலான சிறு முயற்சி.

குடியிருப்பவர்கள் எப்படியும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்லும் நேரம் அதற்கான வாகன உபயோகிப்பு, எரிபொருள் சிக்கனம் இப்படி பல அதில் அடங்கும்.  கடைக்கு செல்லாமல் பலர் அங்கு வீட்டருகில் வரும் வண்டிக்காரரிடம் காய்கறிகள் வாங்குவதுண்டு.  அவை வாடி வதங்கி, இருக்கும்.  விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.

இப்படி ஒரு முயற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..நம் குடியிருப்பில் நிரந்தரமாக சிலருக்கு வேலை, நமக்கு இயற்கை முறையில் உணவிற்குத் தேவையான காய்,கனி வகைகள். வழிபாட்டிற்குத் தேவையான மனலர்கள் கிடைக்கின்றன.   அதன் மூலம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சிறு வருமானம், நமக்கும் மனமகிழ்ச்சி, கண்ணுக்கு குளிர்ச்சி.  நம் பூமியை குளிரச்செய்தல். நம் குழந்தைகளுக்கு இயற்கை சூழல் மிக்க இடம்..இப்படி பல நன்மைகள் இருக்கும் இவற்றை முயற்சித்துப்பார்த்தால் என்ன..?

தீமை என யோசித்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நலச்சங்கம் அமைக்கும் சிறுகடை மூலமாகவே அதை நியாய விலைக்கு வாங்கவேண்டும்.  அவரவராக பரிக்க நேரிட்டால் நலச்சங்கத்திற்கும், மற்றும் உபயோகிக்காத குடியிருப்போருக்கும் நட்டம். எனவே, இதுபோன்ற குறுக்குவழி தவிர்த்து  நமது குடியிருப்போர் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும், அனைவருக்கும் பலன் முறையாக சென்றடைய வேண்டும் எனவும் நினைத்து ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக வரும் எனத் தோன்றவே இந்தப் பதிவு. முயற்சித்துப்பார்க்கலாம்.  இதை படிக்கும் ஏதேனும் ஒரு சங்கம் முயற்சித்து நடைமுறைப்படுத்தினாலும் மகிழ்ச்சியே.. எனது பார்வையில் யோசித்து எழுதியது.

இதை நடைமுறைப்படுத்துவதினால் உபயோகமாக இருக்குமா இல்லை நடைமுறைப்படுத்துவதால் வரும் சங்கடங்கள் எவை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது என அனைவரும் தங்கள் பார்வையில் தோன்றும் கருத்துக்களைப் பகிரவும். நன்றி.

8 comments:

  1. நல்ல ஆலோசனைகள்.
    பேசாம நீங்க மந்திரியாகிடுங்களேன் நல்லா பட்ஜெட் போடுறீங்க.:)

    ReplyDelete
  2. நிச்சயமாகச் செய்யலாம்
    நல்ல ஆலோசனை
    முதலில் அடுக்கு மாடி குடியிருப்புகளில்
    இருப்பவர்களின் மனோபாவங்கள் மாறவேண்டும்
    என் நினைக்கிறேன்
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்...பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல், வணிக ரீதியாக யோசித்து செயல்படுத்த அனைவருக்கும் பலனளிக்கும் என்ற சிந்தனையில் உதித்தது..நல்லது நடக்குமென காத்திருப்போம்..:)

      Delete
  3. மிக மிக நல்ல யோசனைகள்...

    /// மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடலாம். ///

    இப்போது எங்கள் ஊரிலும் செயல் படுத்துகிறார்கள்...

    வீடு சுற்றி (நம்மால் முடிந்தளவு) செடிகள் இருந்தால், அந்த சந்தோசமே வேற...

    நன்றி...
    tm3

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ..தனிப்பட்ட முறையில் பலர் துவங்கியிருக்கிறார்கள்..குடியிருப்போர் நல சங்கம் மூலமாக செயல்படுத்த முழு அளவில் வெற்றிபெறவும், அனைவரும் பயனடையவும் வாய்ப்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்..

      Delete
  4. Good work Friend... Different one from your usual writings... Useful informations to the society... Keep Writing.. All the best...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழரே...நன்றி.:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__