முகப்பு...

Saturday 2 July 2011

குருதியின் வேர்கள்

கலிங்கத்து மன்னா!

நீ
அன்னையிடம் குடித்தது
பாலா அல்லது குருதியா?!

மனிதர்களைக் கொல்வது வெற்றியா?
கொள்வதில் வெற்றியா?

அன்று,
தாய்ப்பால் அருந்தியவன்
இன்று,
குருதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளானே!

அன்று,
என் கரம் பிடித்து நடந்தவன்
இன்று,
காலனின் கரம் பிடித்தானே!!

அன்று,
அன்னை மடி உறங்கியவன்,
இன்று,
மண்ணில் மீளா உறக்கத்திற்குச் 
சென்றானே!!

இனி,
அன்னை என்றழைக்க
பிள்ளை ஒன்றில்லையே...

பிள்ளைக்குக் கொல்லிவைத்த
பாவியாக்கி விட்டாயே!

நீ
கண்ட வெற்றியால்,
என் தாய்மைக்கு பதில் கூற முடியுமா?

உன்னுடைய இந்த வெற்றி
உயிரை அளிக்க முடியுமா?
பிணக்குவியலுக்கு இடையில்,
வெற்றி விழா வைத்து,
வேடிக்கை காணும்...
விபரீதம்தான் ஏன்??


5 comments:

  1. மனிதனின் தவறுகள் படிந்த இடம்தான் வரலாறுகளின் வழித்தடம். நாளைகளின் நம்பிக்கைகள் விதைக்கப் படுவதும், நேற்றைகளின் உண்மைகள் புதைக்கப் படுவதும் வரலாறுப் பேசும் வாழ்க்கைகள். வெற்றித் தோல்வி என்பது வெறும் வேடிக்கை. பலம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தாது. சக உயிர்களின் உன்னதம் பேசி வாழ்வியலை நிலை நிறுத்துகிறது இந்தக் கவிதை. பிணத்துக்கு முன் அரசன் என்ன..? ஆண்டி என்ன...?

    ReplyDelete
  2. பிணத்துக்கு முன் அரசன் என்ன..? ஆண்டி என்ன...?

    உண்மைதான் நண்பரே....ஆனால் இதை உணர நாம் தான் மறுக்கிறோம்...தங்கள் கருத்துக்கு நன்றி....

    ReplyDelete
  3. மற்றவரின் மரணவேதனை கண்டு நகைத்து சிரித்து வெற்றி விழா கொண்டாடும்
    நவின கலிங்கத்து மன்னர்களின் நடுவில் தான் நாமும் நடமாடி கொண்டு இருக்கிறோம்,,,,,
    மிக அருமை வாழ்த்துக்கள்......அக்கா ,,,,,,,,

    ReplyDelete
  4. முற்றிலும் உண்மைதான் காஜா...தம்பியின் வரவுக்கு நன்றி...

    ReplyDelete
  5. சற்றே சிந்தியுங்களேன், இவைகள் சொல்லும் உண்மைகள் தான் என்னவென்று....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__