முகப்பு...

Sunday, 3 July 2011

சுறுசுறுப்பு



சுறுசுறுப்புக்கு உதாரணம் எறும்பாம்...
யார் சொன்னது?

நகரத்து மக்களைக் கண்டிருந்தால்
இப்படிக் கூறியிருக்க மாட்டார்கள்...

காலை நடைபயிற்சிக்கும், ஆரோக்கிய
உணவை சாப்பிடவும் நேரமில்லாமல்,

அவசர உணவை கிள்ளிச் சாப்பிட்டு...
அண்டை அயலாரின் முகம் தெரியாமல்...

நடை தவிர்த்த பயணத்தில்
மாசுக் காற்றை சுவாசித்து

அலுவலகம் சென்று...
கணினி முன்னாள் காலத்தை கழித்து...

அலைபேசியில் அன்பானவர்களுடன் 
அரை வார்த்தைப் பேசி நலன் விசாரித்து...

இரம்மியமான மாலைப் பொழுதை தவிர்த்து...
இரவு வீடு திரும்பி...

அன்பான மனைவியிடம் 
கொஞ்சிப்பேச நேரமில்லாமல்...

மழலையை மடியேந்தி 
மகிழ நேரமில்லை...

அன்னை மடியில் உறங்க
நேரமில்லை...

தந்தை உடல்நலம், தாயின் மனநலம்
காண நேரமில்லை...

சகோதர, சகோதரியிடம் பாசமுடன் 
நேசம் காண நேரமில்லை...

நட்பு பாராட்ட
நேரமில்லை...

இப்படி எதற்குமே நேரம்
இல்லாமல்...

எங்கே செல்கிறோம்? ஏன் செல்கிறோம்?
என்று கூட அறியாமல்...

ஓடிக்கொண்டிருக்கும்...
நகரத்து மக்களை விட

அந்த எறும்பு என்ன 
அத்தனை "சுறுசுறுப்பா "??

3 comments:

  1. நகரத்து சொர்க்கத்தில் வாழும் நம்மை போன்ற ஒவ்வொரு மனிதனும் சாப்பிடும் நேரம் கூட சோற்றை கவனிக்காமல் நேரத்தை தான் கவனிக்கிறான் ,,,,,,
    இந்த அசுர வேக உலகத்தில் ஒருநிமிடம் பின் தங்கினால் கூட நம்மை தாண்டி ஓடும் கூட்டம் என்னும் பொழுது ஒரு வாய் கவளம் கூட நாம் வயிறில் இறங்காது ,,,,,,,,,,,,,,,,
    இந்த அவசர உலகில் எதுவுமே வேண்டாம் ,,,,,,,௨௦ மணி நேர உழைப்பில் இறைவனிடம் கேட்பது ஒரு வாய் நிறைவான உணவு மட்டுமே ,,,,
    நன்றி அக்கா ,,,,,,,,,,,,,

    ReplyDelete
  2. மனிதன் ஓடி ஓடி உழைத்தும் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியவில்லை என்றால் அந்த உழைப்பில் அர்த்தமேயில்லை...

    கருத்துக்கு நன்றி காஜா...

    ReplyDelete
  3. இவ்வளவு சுறுசுறுப்பாய் ஓடும் இவர்கள் இந்த ஓட்டத்தின் விடை தான் என்னவென்று சற்று யோசித்திருப்பார்களா? இவர்கள் கண்ட உலகம் வேறு. உண்மையான உலகம் என்ற ஒன்று இருப்பதே தெரியாத இவர்களுக்கு வேண்டும் என்றால் அந்த உலகத்தை நாம் அறிமுகப்படுத்தலாம். அதுவும் இந்த புண்ணியபூமியில் தான் உள்ளது. என்ன ஒரு மாற்றம் பாருங்கள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__