முகப்பு...

Thursday, 28 July 2011

யார் குற்றவாளி??










கண் முன்னே கொலை முயற்சி..
கை, கால் தளர்ந்து உடல் நடுநடுங்க.,
நெஞ்சு பதைபதைக்க.,
மெய் சிலிர்த்து தடுக்கவும் முடியாமல்,
மற்றவரைப் போல் ரசிக்கவும் முடியாமல்..


செய்வதறியாது சிறிது நேரம் சிலைபோல் நான்.
தன்னை மறந்து,
நத்தையைப் போல் முடங்குகிறேன்.,
பார்க்க மனமின்றி..


இங்கு இறைவன் கொடுத்த உயிரை எடுக்க,
இன்னொரு உயிர் துரத்துகிறது.,
அரசாங்க அனுமதியுடன்.!!
பார்த்து ரசிக்கிறது பல உயிர்கள்..
ஒரு உயிரின் இழப்பில் இன்பம் காணும்
இதுவும் ஒரு பிறவியா??






தன்னைக் காப்பாற்றிக் கொள்ள,
தகுந்த  இடம் தேடி
இறையை எண்ணி இங்குமங்கும் 
ஓடி, தானறிந்த மொழியிலே மரண ஓலமிடும்,
 
நாய்.......


இங்கு இறை கொடுத்த உயிரை,
எடுக்க நினைப்பவன் குற்றவாளியா?
நாயாகப் பிறந்தது அதன் குற்றமா?
இல்லை,
முரண்பாடான சிந்தனையையும், உயிரையும்
படைத்த அந்த இறைவன் குற்றவாளியா??
 
யார் குற்றவாளி??
 

 

4 comments:

  1. குற்றங்களை களைய வந்தவனே குற்றங்களை களைந்து எடுக்கும் அவலம் தான். முரண்பாட்டின் மொத்த உருவமாகவே உரு மாறிவிட்ட மானுடத்தை வேடிக்கை தான் பார்க்க முடியும் வேறென்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  2. இறைவன் உலகில் இருக்கிறாரா?
    பதில் மேலே.

    ReplyDelete
  3. உண்மைதான் பாலா..முரண்பாட்டின் மொத்த உருவம் நம் வாழ்வு..வருந்தவேண்டிய விசயம்தான்..

    ReplyDelete
  4. தம்பி.கலைச்செல்வன் இதையெல்லாம் பார்க்கும்போது சில நேரம் இந்த வினா எழத்தான் செய்கிறது..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__