யாரோ ஒருவரின்
பொறுப்பற்ற செயலால் உண்டாகும்
வீண் அலைச்சல்,
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும்,
அனுபவத்தையும்
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..
கற்பிக்கப்பட்டதை விடுத்து,
மாயக்கண்ணாடியணிந்து
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம்
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும்,
விரும்பியவர்களும்
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை
விரும்பியழைக்கும் மனம்...!
****
பொறுப்பற்ற செயலால் உண்டாகும்
வீண் அலைச்சல்,
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும்,
அனுபவத்தையும்
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..
கற்பிக்கப்பட்டதை விடுத்து,
மாயக்கண்ணாடியணிந்து
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம்
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும்,
விரும்பியவர்களும்
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை
விரும்பியழைக்கும் மனம்...!
****
தொல்லைக்காட்சிதான் நச்
ReplyDelete:) மிக்க நன்றி தோழி..:)
Deleteவணக்கம்
ReplyDeleteஉண்மையான வரிகள்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் - உண்மை...
ReplyDeleteஅட..
ReplyDelete:) நன்றி..
Delete