முகப்பு...

Sunday 30 June 2013

உறவெனும் நூல்...

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் கையில் கிடைத்(த)திருக்கும் நூல் நமக்கு விருப்பமான ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக இருந்துஅதில் இடையில் சிலபக்கங்கள்  கிழிந்துபோயிருப்பின் அதை அப்படியே விட்டுவிடாமல், அந்தப்பக்கத்தை விடுத்து தொடர்ந்து படித்து முடிப்பது போல்தான் மனித உறவுகளும்.  இயற்கையெனும் ஆசிரியர் எழுதிய மனிதஉறவெனும் மகத்தான நூல். நூல் நன்றாக இருப்பின் படித்து ரசிக்கவேண்டுமே தவிர, நாம் அந்த நூலை எவ்வாறெல்லாம் ரசித்துப்படித்தோமென ஆசிரியர் நம்மைப்பற்றி உணரவேண்டும் என எதிர்பார்ப்பது எங்ஙனம்..அதுபோல்  நாம் விரும்பும் பக்கங்கள் மட்டும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்காதுமனித உறவுகளில் படிக்கவிரும்பும் சில பக்கங்கள் காணாது போயிருப்பினும் பக்கங்கள் விடுத்துப்படிக்க பழகுவோம்.    விடுபட்ட பக்கங்களைவிட இருக்கும் பக்கங்கள் இன்னும் அதிக சுவாரசியமானதாக இருக்கலாம். இல்லாத பக்கத்தை எண்ணி இருக்கும் பக்கங்களையும் படிக்காது தவிர்த்து நல்ல நூலை படிக்காமல் இருந்துவிடும் தவறைச் செய்யாதிருப்போம். 

9 comments:

  1. நல்ல ஆலோசனை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  2. ஆலோசனை அருமை அக்கா..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி...:) கடைபிடிப்போம் வாழ்வினில்.

      Delete
  3. .. இல்லாத பக்கத்தை எண்ணி இருக்கும் பக்கங்களையும் படிக்காது தவிர்த்து நல்ல நூலை படிக்காமல் இருந்துவிடும் தவறைச் செய்யாதிருப்போம். ..

    உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...நன்றி..நடைமுறைப்படுத்துவோம்..வாழ்க வளமுடன்.

      Delete
  4. தூங்கிக்கொண்டிருக்கும் சிந்தனையை தூண்டிவிடும் விதமாகவும், எல்லோரும் ஏற்கும் விதமாகவு எழுதியிருக்கிறீர்கள்.

    ஆனாலும் உறவெனும் நூலில் இல்லாமல் போன அந்த பக்கங்களை விட்டு படிப்பது கஷ்டமானதாக இருந்தாலும் அதை பழகித்தான் ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். அப்படியே பழகிக்கொண்டாலும் விட்டுப்போன அந்த பக்கங்களில் இந்த பக்கத்தை விடவும் ஏதாவது ஸ்வாரஸ்யமாக இருந்திருக்கலாமோ என்கிற மன ஏக்கத்துடன்கூடிய ஏமாற்றத்துடனும்தான் மீதமுள்ள பக்கங்களை படிக்க வேண்டியதாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் உண்மைதான் ஆனந்த்..:) நன்றி

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__