முகப்பு...

Saturday 22 October 2011

நூலகம்....!!





எம் சிந்தனைகளை கிறுக்கல்களாய் வெளிப்படுத்தும் முயற்சி...:)



விரயமாகும் நேரம் எண்ணி 
வேதனையுடன் ஆண்டவனை வேண்டி நிற்க..

பொக்கிமாய் புத்தகங்கள் பலவுண்டு 
படித்து நீயும் பக்குவமடை என்றே
அறிமுகப்படுத்தினான் 
அரியதொரு நூலகத்தை...!

ஆன்மீகம்விஞ்ஞானம்மெய்ஞானம்..
மருத்துவமும் அறியலாம்.. 
கவிதையு, கட்டுரைகதையென 
பல தகவல்கள் கிடைக்கு மிங்கே...
சுவாசமறியவும்சுயமறியவும் - தூண்டும்.
மகத்துவம் வாய்ந்த புத்தகமும் உண்டு.. 
படித்தால் நீ ஞானியுமாகலாம்..!
பார்ப்பதற்கே காலமில்லை 
அத்தனையும் படிப்பதெங்கே..?
என் மனம் பண்படுவ தெப்போது.. !! ?
புத்தகங்களைப் புரட்ட புரட்ட..,
மனமும் எள்ளி நகைத்தது எனை நோக்கி..
அரிய பல நூல்கள் இருக்கு இங்கே..
நீ அறிய விரும்புவது எது வென வினவ..
எனக்குத் தேவை எதுவென அறிய..
வாசகர்களை வரவழைக்கும் நூலகமே..
நீயே விளக்கு..என் குழப்பத்தை விலக்கு..!
நூலகம் என்னிடம் 
நூறு வகை நூல்கள் உண்டு..
உன்னையறி.. உன் விருப்பமறி.. என உரைக்க..
நூலகமாய் இருந்திடத்தான் ஆசையெனக்கு
ஆனால்......
நூறு வகை புத்தகத்தைக்கூட படித்திராத
நான் எப்படி.............??!!

சரி..
நூலகமாய் வேண்டாம்..
ஒரு நூலாகவாவது இருக்கலாமே...?
இதுவும் பேராசைதான் உள்ளம் அறிவுறுத்த..
நூலாக வேண்டாம்..
ஒரு நூலையாவது  படிக்க எண்ணி..
கவிதையெனும் புத்தகமொன்றைக் கையிலெடுத்தேன்..
உன்னால் முடியும் படியென.,
குறுநகை புரிந்தது நூலகம்...
கவிதையை அறிந்திட எண்ணி
புத்தகத்தைப் புரட்ட புரட்ட...
முழுவதும் படித்து முடிப்பதற்குள்ளேயே..
சிந்தனைச் சிறகுகள் வெட்டப்பட்டு..
எதுகை,மோனை
உவமான, உவமேயம் ஏதுமின்றி
முற்றுப் பெறுகிறது கவிதை...
முடிவறியாமலேயே....!
புத்தகத்தை முழுமையாய் அறிந்திடமுடியா சோகத்தில் நான்...!
ஒரு புத்தகம் கூட முழுமையாய் படிக்காதவரை..
வாசகியாய் அடைந்த சோகத்தில் நூலகம்..

தன்னிடமுள்ள நூல்களை பலரும்
படித்துப் பயனடைய வேண்டுமென..
விருப்பமுள்ள வாசகனுக்காய் 
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது
நூலகம்...!
அடுத்தப் பிறவியிலேனும்
பொக்கிமான நூலகத்தில்..
புத்தகமாய் இருப்பேனா...?  
புத்தகத்தை முழுவதுமாய் படிப்பேனா ..??
ஏக்கமுடன் நான்....!

7 comments:

  1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி எல்.கே...

    ReplyDelete
  2. ஒரு புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாய் படித்து கொண்டே இருக்க.., விரைவில் புத்தகமே படித்து முடிக்க பட்டிருக்கும் என்பதை கூற விரும்புகிறேன்.

    படிக்காதவரை அவை அப்படியே இருக்கும். படிக்க துவங்குங்கள்... இந்த நூலகம் தாண்டியும்..., இன்னொரு நூலகம் இருக்கிறதா எனத் தேட வேண்டி வரும். பாராட்டுக்கள். நல்ல பதிவுக்கு.

    ReplyDelete
  3. தாங்கள் கூறுவது உண்மைதான்.. தாங்கள் அளிக்கும் ஊக்கத்தில் புத்தகத்தை படிப்பதற்கு முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
  4. புத்தகம் புது தகமாய் துளிர்த்திருக்கின்றது காயு... நூல் அகத்தை அறிவதே அரிது.. அரிந்ததை அறிந்து கொள்ளும் அறிவிடம் நூலகம். பொக்கிசத்தை தொட்டாலே புதுமைகள் புலரும் பூவிடம். சோகம் தவிர்த்து சுகத்தில் நில்லுங்கள். இகம், அகம் எல்லாம் இயல்பாய் வெளிப்படும், இறைவழி புலப்படும். படித்து பயனுற பாங்குடன் வாழ்த்துகிறோம். நற்சிந்தனைக்கு நல்வாழ்த்துக்கள் காயு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாலா..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..தங்கள் வாழ்த்து எம்மை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  5. அன்பின் கவிக் காயத்ரி - நூலகம் பதிவு அருமை - ஒவ்வொரு பக்கமாக படித்தால் அனைத்துப் பக்கங்களையும் படித்து விடலாம் - அதே போல் ஒவ்வொரு நூலாகப் படித்தால் அனௌத்து நூல்களும் படித்து முடிக்கப் படும். அருமையான சிந்தனை - பக்கங்கள் - புத்த்கங்கள் - நூலக்ங்கள் என முன்னேற இயலும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__