ஈருடல் ஓருயிராய் இருப்போமென உறுதி கூறி..
என் சித்தம் கலங்கடித்து.,
சிவனேயென,
உட்கார்ந்து சித்தாந்தம் பேசும் நீ,
சிவனேயென,
உட்கார்ந்து சித்தாந்தம் பேசும் நீ,
ஓருடல் ஈருயிராய் நான்..
உன்னை மறக்கவும் முடியாமல்..நினைக்கவும் முடியாமல்..
தடுமாறும் என் சித்தம் கலங்கும் முன்...
சிவனேயென இருந்திருக்கக் கூடாதா??
உன்னை மறக்கவும் முடியாமல்..நினைக்கவும் முடியாமல்..
தடுமாறும் என் சித்தம் கலங்கும் முன்...
சிவனேயென இருந்திருக்கக் கூடாதா??
என் மனதை.,
கிழித்துக் காயபடுத்தும் கத்தியை
அனைவரிடமும்
கொடுத்த கடவுள்,
உன்னிடம் மட்டும்
கொடுக்கத் தவறி இருப்பாரா என்ன..??
தினமும் வெட்டுப்பட்டு.,
இனி வெட்டுப்பட வேண்டாமென
பட்டுப்போய் விறகாகி விட்டோம் என,
நிம்மதியாய் இருக்க.....
எரிக்க வேண்டிய என்னை...
தண்ணீர் ஊற்றி
துளிர்க்கச் செய்த பின்..
கிழித்துக் காயபடுத்தும் கத்தியை
அனைவரிடமும்
கொடுத்த கடவுள்,
உன்னிடம் மட்டும்
கொடுக்கத் தவறி இருப்பாரா என்ன..??
தினமும் வெட்டுப்பட்டு.,
இனி வெட்டுப்பட வேண்டாமென
பட்டுப்போய் விறகாகி விட்டோம் என,
நிம்மதியாய் இருக்க.....
எரிக்க வேண்டிய என்னை...
தண்ணீர் ஊற்றி
துளிர்க்கச் செய்த பின்..
வேருக்கு திராவகம் ஊற்றி எரிப்பது ஏனோ??
உண்மைதான் உறங்கிய உணர்வுகளை தட்டி எழுப்பிய பின்னால் உதிர்ந்த மலர் போல் விட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம் ? பள்ளியறை பதுமையாக மட்டும் நினைப்பதற்கு மட்டும் தானோ ? என்னெ கல் மனம் ?
ReplyDeleteகருத்தளித்து ஊக்கமளித்தமைக்கு நன்றி சகோ..
ReplyDelete