முகப்பு...

Wednesday 12 October 2011

அரைகுறை அறிவு..


என்னைக் கண்டு விமானம் படைத்தவனும் நீ..
அதில் வரும் விமானிகளை கைதிகளாய் பிடிப்பவனும் நீ..

எல்லையில்லா தூரத்தை அடைய நினைக்கும்.,
என்னைக் கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவனும்  நீ...

இரயிலைக் கண்டவனும் நீ..
அதை வெடி வைத்துத் தகர்ப்பவனும் நீ..

பேருந்தைக் கண்டவனும் நீ..
அதை எறிப்பவனும் நீ..

மரத்தை நட்டவனும் நீ..
அதை வெட்டுபவனும் நீ..
அதன் அருமையை உணர்த்துபவனும் நீ...

ஆடம்பர பொருட்களை அறிமுகப்படுத்தியதும்  நீ..
அதன் ஆபத்தை விளக்குபவனும் நீ..

ஊழலைக் கண்டவனும் நீ..
அதை தடுக்க நினைப்பவனும் நீ...

இயற்கையை மாசு படுத்துவதும் நீ..
அதை காக்கச் சொல்வதும் நீ..

நோய்கள் தோன்றக் காரணமும் நீ..
அதை குணப்படுத்தும் மருந்தைக் கண்டு பிடிப்பவனும்  நீ..

நல்லது கெட்டது இரண்டையும் கண்ட நீ
நீரற்ற பாலை அருந்தும் அன்னமாய்...
நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அறிவற்று இருப்பது ஏனோ..?







2 comments:

  1. நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டால் நாங்கள் மனிதராகிவிடுவோமே கவியே....:-)

    ReplyDelete
  2. Anonymous...தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__