அவளறியா வேளையில்,
அவளையடைந்து அவளுணர்ந்த காதலை,
அவனுக்குணர்த்த நாணமுற்று,
மனதினில் மறைத்து.,
அலைபேசி அழைக்கும்போதெல்லாம்,
அவனாக இருக்குமென,
அடிக்கொருதரம் பார்த்து ஏங்கும் மனம்..
அவனிடம் பேசுவதாக,
அவளுக்குள் இருக்கும் அவனிடம் அவளே பேசி,
சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டு...
அவளுக்குள்ளே வாழ்கிறாள்...
மனதினுள் மருகி இருதலைக்கொள்ளி எறும்பாய்.,
பரிதவித்த பெண்ணின் மனம் யாரறிவார்?
நெஞ்சில் உள்ளவன் நெறிஞ்சி முள்ளாய் உறுத்த,
நிமிடமும் நெருப்பாய் சுடுகிறது...
அவன் பாராமுகம் காட்டும்போது.
சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்கிறது....
உள்ளிருக்கும் அவனை நினைக்கையில்.
அவனை எண்ணி,
அவள் உறங்கா நாட்களை,
அந்த நிலாத் தோழியும் கூறுவாளே..!
காதல் கொண்டவனை கட்டியணைக்க,
நீருக்கு ஏங்கும் நெற்பயிராக மனது.
மனதிற்கும், கலாச்சாரத்திற்கும் போராட்டம்.,
வென்றது அவள் கலாச்சாரம்...
கலாசாரத்தைக் காப்பாற்றிக்
கண்ணீரை தனதாக்கி,
அவளுக்குள் உதயமான காதல்
அவளையடைந்து அவளுணர்ந்த காதலை,
அவனுக்குணர்த்த நாணமுற்று,
மனதினில் மறைத்து.,
அலைபேசி அழைக்கும்போதெல்லாம்,
அவனாக இருக்குமென,
அடிக்கொருதரம் பார்த்து ஏங்கும் மனம்..
அவனிடம் பேசுவதாக,
அவளுக்குள் இருக்கும் அவனிடம் அவளே பேசி,
சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டு...
அவளுக்குள்ளே வாழ்கிறாள்...
மனதினுள் மருகி இருதலைக்கொள்ளி எறும்பாய்.,
பரிதவித்த பெண்ணின் மனம் யாரறிவார்?
நெஞ்சில் உள்ளவன் நெறிஞ்சி முள்ளாய் உறுத்த,
நிமிடமும் நெருப்பாய் சுடுகிறது...
அவன் பாராமுகம் காட்டும்போது.
சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்கிறது....
உள்ளிருக்கும் அவனை நினைக்கையில்.
அவனை எண்ணி,
அவள் உறங்கா நாட்களை,
அந்த நிலாத் தோழியும் கூறுவாளே..!
காதல் கொண்டவனை கட்டியணைக்க,
நீருக்கு ஏங்கும் நெற்பயிராக மனது.
மனதிற்கும், கலாச்சாரத்திற்கும் போராட்டம்.,
வென்றது அவள் கலாச்சாரம்...
கலாசாரத்தைக் காப்பாற்றிக்
கண்ணீரை தனதாக்கி,
அவளுக்குள் உதயமான காதல்
அவளுக்குள்ளேயே அஸ்தமனமும் ஆகிறது..
நிசமான காதலும் இங்கே
நிழலாகிக் கனவாகிறது....
மலரும் நினைவுகள்...அருமையாய் எழுத்தில் வடித்துள்ளீர்கள் தோழி..
ReplyDelete//நிசமான காதலும் இங்கே
நிழலாகிக் கனவாகிறது....//
தோழி கௌரியின் வருகைக்கு நன்றி..தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வழங்கி வரவும்..
ReplyDeleteஅருமை தோழி
ReplyDeleteநன்றி தோழர் ஆனந்த் கெ.ம.
ReplyDeleteஅறுமையான பதிப்பு உணர்வுகளின் உன்னத வடிவம்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி சகோ.ஷங்கர்
ReplyDelete