முகப்பு...

Monday, 19 September 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளை கட்டுரைப்போட்டி - முடிவுகள்


கருமவீரர் காமராசர் அவர்களின் 113 வது பிறந்த தினத்தை(15 ஜூலை) முன்னிட்டு, ”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்” என்ற தலைப்பில் “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். :)
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என தங்கள் பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில், பரிசுக்குரிய சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம் தங்களுக்காக. :)
நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். __/|\__
1.உயர்திரு. சோழ நாகராஜன் அவர்கள் செம்மலர் இலக்கிய மாத இதழின் துணை ஆசிரியர். கவிஞர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், சினிமா விமர்சகர், பாடகர், குறும்பட இயக்குநர், வீதி நாடக - திரைப்படக் கலைஞர், கலைவாணரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளார். கலைவாணர் இசைப்பேருரை ஆற்றுபவர்.
2. திருமிகு. பவளசங்கரி அவர்கள். சிறந்த எழுத்தாளர், வல்லமை மின் இதழின் ஆசிரியர். கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், ஆலய தரிசனம், கனவில் பூத்த கவிதைகள், கனவு தேசம், யாதுமாகி நின்றாய் என 14 நூல்கள் எழுதியுள்ளார்.
3. உயர்திரு. முனைவர் அண்ணாகண்ணன் - கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 19 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முதல் பரிசு : ந.ஜெயபாலன், திருநெல்வேலி
இரண்டாம் பரிசு : Dr. சலீம் அக்பர், திண்டுக்கல்
மூன்றாம் பரிசு :    திருமதி. ஜீவா அசோகன், திருவண்ணாமலை.

வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்க்குடில் சார்பாகவும், நடுவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து கரம்கோர்த்துப் பயணிக்க வேண்டுகிறோம். 

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை :)

6 comments:

  1. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    ஆமா... இதற்கு முன்னர் ஒரு கட்டுரைப் போட்டி வச்சீங்க... அதுக்கு எனக்கு சான்றிதழ் வரவில்லையே அக்கா... :)

    யோசிங்க... யோசிங்க...

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி... நவம்பர் மாதம் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். :)

      Delete
  3. தமிழ்க்குடில் அறக்கட்டளை கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் நம் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா.. :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__