முகப்பு...

Tuesday, 27 September 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளை - நான்காம் ஆண்டு (2015-16) அறிக்கை


தமிழ்க்குடில் அறக்கட்டளை
நான்காம்  ஆண்டு (2015-2016) நிதியறிக்கை

                                                   
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நான்காமாண்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த பயணத்தில்முழுமையான ஒத்துழைப்பு வழங்கியும்உற்சாகமூட்டியும் நட்புகள் வழங்கிவரும் பேராதரவுடன் குடில் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் சிரமம் பாராமல் தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் வழங்கிக்கொண்டிருக்கும்  அன்புத்தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம்.  தமிழ்க்குடில் சிறப்பாக செயலாற்றிட அடிப்படையாக தோழமைகளின் அயராத உழைப்பும்பங்களிப்பும்ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும்நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்

அறப்பணியில் தமிழ்க்குடில்:

கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள்:

*                2015 மே மாதம்:              
அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தியது.  உயர்திரு. முனைவர் க. இராமசாமி. அவர்கள் (செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) மற்றும் எழுத்தாளர் திருமதி. ஷைலஜா அவர்களும் போட்டியின் நடுவராக பொறுப்பேற்றிருந்தனர்.

*                2015 ஜூலை மாதம்
கருமவீரர் காமராஜர் அவர்களின் 112 வது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியும் மற்றும் தமிழ்க்கடல் தவத்திரு. மறைமலை அடிகளார்  அவர்களின் 139 வது பிறந்ததினத்தை முன்னிட்டு சொற்பொழிவுப்போட்டியும் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தியது.

தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன் உயர்திரு மறைதிருதாயுமானவன்” அவர்கள் போட்டியின் நடுவராக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து கொடுத்ததோடு விழாமேடையில் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

*                2015 டிசம்பர் மாதம்          
மகாகவி பாரதியார் அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளையால் கவிதைப்போட்டி நடத்தப்பட்டது.

கலைமகள் ஆசிரியர் உயர்திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்  முனைவர்
மு. முத்துவேல் அவர்கள் இருவரும் தங்களது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளனர்..

இணையம் மூலம் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தி போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று படைப்பாளிகளுக்கு தமிழ்க்குடிலின் நினைவுப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.  போட்டிகளில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழ் ஆர்வமுடையவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பங்கு:
கடலூர் வெள்ள நிவாரணப்பணிகடந்த 2015 டிசம்பர் மாதம் இயற்கையன்னையின் சீற்றத்தினை எதிர்கொள்ளமுடியாமல் பரிதவித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கிராமத்து மக்களுக்கு நம் தமிழ்க்குடில்     அறக்கட்டளை தம் உதவிக்கரங்களை நீட்டியது. 
நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்ட கிராமங்கள்: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தம் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்ட நம் தமிழ்க்குடில் அறக்கட்டளை கீழே கூறப்பட்டுள்ள 25 கிராமங்களுக்கு நம் உதவிகளை வழங்கியது.
ஆடூர், நத்தமலை, திருச்சின்னபுரம், கொள்ளுமேடு, இராயநல்லூர், கந்தகுமாரன், கூத்தங்குடி, உத்தமசோழகம், வெள்ளிக்குடி, மெய்யனூர்,
தெ. விருத்தாங்கநல்லூர், வ. விருத்தாங்கநல்லூர், கூழப்பாடி, ஓடகூர், வாழக்கொல்லை, பூலாப்பாடி, சிறகிழந்தநல்லூர், திருநாரையூர், நெடுஞ்சேரிசர்வராஜன்பேட்டை, நெல்லிக்குப்பம், சோழவெளி, திடீர்குப்பம், திருக்கண்டேஸ்வரம், தமிழ்குச்சிப்பாளையம்.

வழங்கப்பட்ட பொருட்கள்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அன்றைய அத்தியாவசியத் தேவையான உணவுகளை வழங்கியது.  மற்றும் பாதிப்பின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நிலமை சகஜ நிலைக்குத் திரும்பும்வரை அவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவையினைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான பொருளதவியும் அறக்கட்டளையால் செய்யப்பட்டது. 

அன்றைய நிலையில் அத்தியாவசியப் பொருட்களாக அவர்களுக்குத் தேவைப்பட்ட போர்வை, பாய், உடைகள்பால்பவுடர், அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு மற்றும் தேவையான உணவுப்பொருட்கள், பாத்திரங்கள் மருந்து, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கட், பிரெட், உணவு மற்றும் குடிநீர் ஆகிய பொருட்கள் அவரவர் தேவையறிந்து வழங்கப்பட்டன.

ரூ.25,00,000/- லட்சங்கள் மதிப்புடைய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளையும், அதன் வழியாகவும் வழங்கியுள்ளது.  

இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவிட தமிழ்க்குடில் அறக்கட்டளைக்குப் பொருட்களாகவும் நிதியாகவும் உரிய நேரத்தில் வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் கடலூர் மக்கள் சார்பாகவும் தமிழ்க்குடில் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டுக்கான நிதியறிக்கை வரவு,செலவு விவங்கள் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

             தமிழ்க்குடில் அறக்கட்டளை


2015 & 2016 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை விகிதாச்சாரம் (Financial Ratio) மற்றும் நிதிநிலை  அறிக்கை(Financial Analyze)
2015 - 2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை

..
விவரங்கள்

செலவு விகிதம் 100%

ரொக்க இருப்பு



கையிருப்பு:
Rs. 2,745.03


வங்கி இருப்பு:
Rs. 33,093.43


நன்கொடை உள்வரவு
Rs. 89,951.00


தொண்டு முதல் நிதி
Rs. 55,500.00


ஓராண்டு உள்வரவுகள்
Rs. 1,81,289.46


ஓராண்டு செலவுகள்
Rs. 70,793.00
39.05%




உட்பிரிவுகளின் அடிப்படையில் விகிதம்



எழுதுபொருள் செலவுகள்
Rs. 18.00
0.03%

அஞ்சலகச்செலவுகள்
Rs. 240.00
0.34%

பயணச்செலவுகள்
Rs. 1,215.00
1.72%

பணியாளர் நலன் செலவுகள்
Rs. 300.00
0.42%

தணிக்கையர் சேவைக்கட்டணம்
Rs. 3,420.00
4.83%

அறப்பணி செலவுகள்
Rs. 53,499.00
75.57%

எரிபொருள்
Rs. 1,400.00
1.98%

பழுது மற்றும் பராமரிப்பு
(Repair and Maintenance)
Rs. 3,201.00
4.52%

சொத்துசார் செலவு - பிரொஜக்டர்
Rs. 6,398.00
9.04%

தொலைபேசிக்கட்டணம்
Rs. 500.00
0.71%

வங்கிக்கட்டணம்
Rs. 601.62
0.85%

மொத்த செலவுகள்
Rs. 70,792.62
100.00%





ஆண்டு இறுதி கையிருப்பு



ரொக்கம் கையிருப்பு
Rs. 22,924.03


வங்கி இருப்பு
Rs. 87,572.81


மொத்த இருப்பு
Rs. 1,10,496.84




இடம்

தேதி:
                                    
                                                                        

                                                                             அறங்காவலர்:





அசையா சொத்துகள் 31/03/2016


..
விவரம்
மதிப்பு
ரூ.

1
நூலகக் கட்டிடம்
(Library Building)
Rs. 3,07,810.00

2
நூல்கள் (Books)
Rs. 80,000.00

3
கணினி மற்றும் கணினி சார் பொருள்
(Computer & Accessories)
Rs. 26,400.00

4
மின்சாதனப் பொருட்கள்
(Electrical Equipments)
Rs. 8,500.00

5
நாற்காலி(Furniture)
Rs. 300.00

6
ப்ரொஜக்டர்(Projector)
Rs. 6,398.00



Rs. 4,29,408.00


நன்றியுரை:
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணித்து உரிய நேரத்தில் தங்களால் இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கி நமது இலட்சியப்பயணத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்புள்ளங்களுக்கு,  தமிழ்க்குடிலின் சார்பில், அறங்காவலர்களின் மனமகிழ்ச்சியுடன் நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.

நம் பயணத்தில் தொடர்ந்து உங்களின் நட்பையும், ஆதரவையும் வழங்கி வருவது நமது சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறோம்.




No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__