முகப்பு...

Sunday 28 April 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை..



785 அங்கத்தினர்களைக் கொண்ட தமிழ்க்குடில் குழுமம் துவங்கிய ஓராண்டில் தமிழ்க்குடில் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21ந்தேதி 2012 அன்று பதிவு செய்யப்பட்டு, 2012 ஜுன் 10ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்க்குடிலின் முதல் ஆண்டுவிழாவில் புலவர் திரு.புலமைப்பித்தன், ஐயா.சிலம்பொலி செல்லப்பா, கவிஞர். திரு.அறிவுமதி, கவிஞர்.திரு.இரவா.கபிலன் மற்றும் புதுச்சேரி மரபுக்கவிஞர் திரு.இராஜ.தியாகராஜன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க்குடில் அறக்கட்டளையின் துவக்கமாக, விழா மேடையில் ஐயா திரு.சிலம்பொலி செல்லப்பா அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக சுமார் 20 பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்


தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கி ஆறு மாதத்தில் இதுவரை சுமார் 60 குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பிற்குத் தேவையான உதவிகளை வழங்கி உள்ளது. 

செப்டம்பார் மாதம் 2012இல், உண்ணாமலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு தேர்வுக்கட்டணத்திற்கென ரூ.12000/- வழங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் திருப்பூரில் இருக்கும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு ஒலி உள்வாங்கி, பள்ளி நூலகத்திற்கு அகராதிகள்  மற்றும் பள்ளிக்குத் தேவையான இதர பொருட்கள் வாங்கிக்கொடுத்து மூன்று  பள்ளிகளிலும் நூறு மரக்கன்றுகளையும் வழங்கி குழந்தைகள் மூலம் நடப்பட்டது.



தமிழ்க்குடில் அறக்கட்டளை அடுத்த முயற்சியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய ஒரு நூலகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 

தோழமைகளின் ஆதரவும்ஒத்துழைப்பும் இல்லையெனில் இவையனைத்தும் எங்களால் சாத்தியமாகி இருக்காது. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

நன்கொடையாக நிதிவழங்க  விருப்பம் உடைய தோழமைகள் வங்கி விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.

https://www.facebook.com/kayathrivaithyanathan

கிராமத்தில் முன்மாதிரியான நூலகத்தை உருவாக்கும் தமிழ்க்குடிலின் இந்த முயற்சிக்குத் தங்கள் அனைவருடைய தொடர்ந்த ஆதரவினை வேண்டுகிறோம். நூலகத்தின் கட்டிடப்பணி முடிவுறும் தருவாயில் இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  விரைவில் நூலகத்தின் திறப்புவிழா செய்யவிருக்கிறோம். நூலகத்திற்கான நூல்களை  வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்கள் (இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, 64 கலைகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்கள்,அறிஞர்களின் சுயசரிதைகள்) கணினி மற்றும் நூல்கள் வைக்கும் அலமாரி, மின்விசிறி இவைகளை அவரவர் விருப்பமும், வசதிக்குமேற்ப வழங்கலாம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இதுவரையிலான செயல்பாடுகளை விவரமாகக் கண்டு அறியக் கீழ்க்கண்ட இணைப்பைப் பார்வையிடவும்.

தமிழ்க்குடில் அறக்கட்டளைக்குத் தங்களது தொடர்ந்த ஆதரவை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

நட்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக

காயத்ரி வைத்தியநாதன்
(பொருளாளர்)


2 comments:

  1. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே..தங்கள் வாழ்த்து பணி சிறக்க செய்யட்டும்..:) _/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__