ஈராறுமணிநேர இடைவிடாத
உரையாடலில்
வேறென்னவென வினவாத
உன்பேச்சில் உள்ளிருக்கும்
அன்பைத்தேடி..
உறக்கம் தவிர்த்த
கண்கள் ஓய்வெடுக்க
நின்மடிதேடும் மனதை
சமாதானப்படுத்தும்
உன்குரலில் புதைந்திருக்கும்
அன்பைத்தேடி...
கரம்பிடித்து
சுற்றித்திரிந்த வீதிகளில்
என்கரம் அழுத்தி
நின்கரம் உணர்த்தும்
அன்பைத்தேடி...
என் மௌனத்தை
மொழிபெயர்க்கும்
உன் உணர்வில் இருக்கும்
அன்பைத்தேடி..
என் மனதாளும்
உன் எண்ணங்களில் இருக்கும்
அன்பைத்தேடி..
வாடிய மனதை
இதமாய் வருடி புத்துயிரூட்டும்
நின் சிந்தனைச்சிறகிலிருக்கும்
அன்பைத்தேடி...
ஜன்னலோரப்பயணத்தில்
வேடிக்கைப்பார்ப்பதாய்
உனைக்கண்டு மகிழ்ந்து
இறங்கும் தருவாயில்
என் கண்கள் பனிக்க
நின் விழிகள் ஏந்திநிற்கும்
அன்பைத்தேடி...
உன்னோடான ஒவ்வொருநொடியும்
சொர்க்கமென உணர்த்தும்
உன் அன்பைத்தேடியே...
என் அதிகாலை விடிகிறது..
அனுதினமும்..!!!
அருமையான காதல் வரிகள்! நன்றி!
ReplyDeleteவாங்க தோழர்..நன்றியும், மகிழ்ச்சியும்..:)
Deleteகாதலர் தின சிறப்புக் கவிதையோ?!
ReplyDeleteஇம்மாதிரி கவிதைகளில் பெரும்பான்மயானவை ஆணின் மன வெளியை மட்டுமே பேசும். ஆனால் தங்களுடைய இக்கவிதை மென்மயான பெண் மொழி பேசுகிறது. அது நன்றாய் உள்ளது.ஆனால் கவிதையின் ஒவ்வொரு கண்ணியின் முடிவிலும் அன்பைத் தேடி எனும் வரியினை தவிர்த்து வேறு சொற்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்குமோ? சொல்லத் தோன்றியதால் சொல்கிறேன் தோழி.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வருணன்.
வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். மாற்றங்கள் கூறியமைக்கு நன்றி..கவனத்தில் கொள்கிறேன். :)
Deleteஅருமை!
ReplyDelete:) வாங்க அமுதா..மகிழ்ச்சி
Delete