சவத்தை மணந்து,
சுயத்தை இழந்து,
சிவத்தை அடைய நினைக்கும்
என்
சித்தத்தை என்ன செய்வது?
நித்தமும்
நான் சவமாகி சிவனை
அடைந்தேனோ என குதூகலிக்க...
விழித்துப்பார்த்த என்னை,
விளையாட்டுப் பொருளாய் நினைத்து.,
இல்லையில்லை...
உன்னைத் தீண்டியது
அரவமில்லை.,
அடியேன்தான்...
என வேடிக்கையாய் சொன்னான் கணவன்!!!
அடைந்தேனோ என குதூகலிக்க...
விழித்துப்பார்த்த என்னை,
விளையாட்டுப் பொருளாய் நினைத்து.,
இல்லையில்லை...
உன்னைத் தீண்டியது
அரவமில்லை.,
அடியேன்தான்...
என வேடிக்கையாய் சொன்னான் கணவன்!!!
******************************************************
பெண்ணே,
உன் மனக்காயங்களை,
மறக்க, மறைக்க..
நீ
உன் உடலில்.,
காயங்களை ஏற்படுதிக்கொண்டாய்!
உன் உடற்காயங்களை
தாங்கும் வலிமை உன்
மனதிற்கு இருக்கலாம்....,
மறக்க, மறைக்க..
நீ
உன் உடலில்.,
காயங்களை ஏற்படுதிக்கொண்டாய்!
உன் உடற்காயங்களை
தாங்கும் வலிமை உன்
மனதிற்கு இருக்கலாம்....,
ஆனால்,
உன் மனக்காயங்களுக்கு
இணையாக காயங்களை
ஏற்படுத்த.,
உன் உடலில் இடமுள்ளதா??
உன் மனக்காயங்களுக்கு
இணையாக காயங்களை
ஏற்படுத்த.,
உன் உடலில் இடமுள்ளதா??
*****************************************************
ஓடி, ஓடி களைத்துப்போன
நான்,
உட்கார்ந்து ஓய்வெடுக்க.,
ஒரு இடம் தேடுகிறேன்..
நான்,
உட்கார்ந்து ஓய்வெடுக்க.,
ஒரு இடம் தேடுகிறேன்..
ஓ சிவனே!
நிரந்தரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
ஒரு நாளாவது
என்னை சவமாக்கி,
உன் இடத்தில்
ஓய்வெடுக்க இடம் கொடுப்பாயா??
--முதிர் கன்னி.
ஒரு நாளாவது
என்னை சவமாக்கி,
உன் இடத்தில்
ஓய்வெடுக்க இடம் கொடுப்பாயா??
--முதிர் கன்னி.
ReplyDeleteசவத்தை மணந்து,
சுயத்தை இழந்து,
சிவத்தை அடைய நினைக்கும்
என்
சித்தத்தை என்ன செய்வது?
நித்தமும்
நான் சவமாகி சிவனை
அடைந்தேனோ என குதூகலிக்க...
விழித்துப்பார்த்த என்னை,
விளையாட்டுப் பொருளாய் நினைத்து.,
இல்லையில்லை...
உன்னைத் தீண்டியது
அரவமில்லை.,
அடியேன்தான்...
என வேடிக்கையாய் சொன்னான் கணவன் -
இதுதாங்க கவிதை... சூப்பர் ஃபீல்.... நல்ல வார்த்தைகோர்ப்பு... நீங்கள் எழுத நினைத்தது வார்த்தைகளில் சரியாக வந்ததோடு மட்டுமில்லாமல் படிப்பவர்களுக்கும் சரியானதொரு உணர்ச்சிக்கலவையை உண்டாக்குகிறது.... சூப்பர்... சூப்பர்... சூப்பர்...
மிக்க மகிழ்ச்சி தோழரே..தங்களின் கருத்தில் தங்கள் உணர்வு வெளிப்படுகிறது. இவ்வளவு ரசனையோடு எமது ஒவ்வொரு பதிவையும் நிதானித்து படித்து குறைகளை சுட்டிக்காட்டியும், பாராட்டியும் கருத்திடுவது மகிழ்ச்சியளிக்கிறது..நன்றி
Delete