முகப்பு...

Tuesday 19 July 2011

பிதாமகன்

எட்டுக் குழந்தைப் பெற்றெடுத்த
கங்கையே, ஏழுக்கு மோட்சமளித்து,
என்னை மட்டும் இத்தரணியில்
தனியாக தவிக்கவிட்டு சென்றதேனோ?

தந்தை கொடுத்த சத்தியத்தால்
நீ ஏழுக்கும் மோட்சமளித்தாய்..
அவர் சத்தியத்தை மீறியதால் 
என்னை விட்டுச் சென்றாய்...

சுயநலமிக்க மனிதர்களிடையே,
என்னை சிக்கவைத்துச்  சென்றாய் நீ...
உன்னை தந்தைக் கேட்ட கேள்விக்கு,
தண்டனை எனக்கெதற்கு?
பாசத்தின் வேரறுத்த பதிவிரதை நீயோ??

தந்தையைப் போல் நானும
சத்தியத்தைக் காப்பாற்ற...
சந்தோசம், சகோதரர்கள் என
சகலமும் இழந்தேனே...

தாயே,  தரணியில் என்னை விட்டுச்சென்றது
அம்புப் படுக்கையில் கிடத்ததானா?
தந்தையளித்த இச்சா மரணம்
வரமா இல்லை சாபமா??



3 comments:

  1. இச்சா மரணம்.... கிடைக்காத வரம், கொடுத்த பரிசு அம்புப் படுக்கை. பிறவிகளைத் தீர்மானிக்கும் உரிமையை இயற்கையை நமக்கு தரவில்லை. இருந்தால் பிதாமகன் பீஷ்மர் ஆகி இருக்க மாட்டார். பிறவி மறுத்திருப்பார். உறவு மறுத்த மனிதனுக்கும் பிறவி மறுக்க முடியவில்லை.

    விதியின் வழியில் வாழ்க்கை.... விளையாட்டுக் காட்டுகிறது. நாம் மதிக் கொண்டு விதியோடு விளையாடுவோம்.

    ReplyDelete
  2. வணக்கம் கவிஞர்..

    விதியின் வழியில் வாழ்க்கை.... விளையாட்டுக் காட்டுகிறது.

    உண்மைதான்..அந்த விளையாட்டை நாமும் விளையாட்டாய் எடுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம்..வாழ்க்கையின் அருமை தெரியாமல்..

    ReplyDelete
  3. ஏழுக்கு மோட்சம் பெற வந்தவன் ஆறையே நெருங்க முடியாமால் அல்லல் படுகின்றான். தாய் சேயை தரணி ஆளப் பணித்தால், ஆனால் சேயோ தனியே ஆளமுடியாது தள்ளாடிக்கொண்டுள்ளது, பின் எங்கனம் தரணியை வழி நடத்துவது. பெற்ற வரத்தை சாபமாக மாற்றும் கொடுமையை வேறெங்கு நாம் காண முடியும்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__