முகப்பு...

Thursday 16 June 2011

தாய்மை...




செல்லமே ....!!!

கேட்டறிந்த 

தாய்மையினை

உனை கருவுற்றபின்

உணரவைத்தாய்...


புவனத்தில் 
நீ 
உதித்த நாளன்று
நான் கேட்டிராத
இசைதனைக் கேட்டுமகிழ்ந்தேன் 
உன் அழுகுரலில்....

உனைத் துணியில் சுற்றி

வாங்கிய வினாடியில்...   

பூவை விட மென்மை 
குழந்தையென உணர்ந்தேன்...

உன் 
சின்னஞ்சிறிய உதடுகளால்

எனை முத்தமிட்டபொழுது

தேமதுர சுவையை உணர்ந்தேன். 

நீ 
உறக்கத்தில் சிந்தும் புன்னகைக்கு

என் நகையும் இணையாகுமா?


உறங்கும் உன்முகத்தில் கிட்டிடும் அமைதி
இப்புவியில் வெறெங்கும் கிடைத்திடுமோ....?


சமாதானத்திற்கு வெண் புறாவை

தூது அனுப்பியவன்,

நீ 
உறங்கும் அழகைக் கண்டிருந்தால் 

உன்னையல்லவா தூது அனுப்பியிருப்பான்..??!!


உன் வெண்முத்துப் பற்கள் காட்டிச்

சிரிக்கும்அழகைக் காண
சிந்தனைப்பறவையும் சிறகடித்துப்பறக்குமே..
பற்களை மாதுளை முத்துக்களுடன் ஒப்பிட்ட 
கவிஞன் மேல் கோவம் கொண்டேன்...
உன் பற்களோடு ஒப்பிடாததால்..

நீ தத்தித் தத்தி நடக்கும் அழகுக்கு 

அன்னத்தின் நடையும் இணையாகுமா..??

இறைவன், இறைவிக்குக் கூட

கிடைக்காத இப்பேரின்பத்தை 

நீ 
எனக்கு இப்பிறவியில் வழங்கிய உனக்கு 
இப்பிறவி அன்றி எப்பிறவி 
நான் எடுப்பினும்...

அதற்கு ஈடு செய்ய முடியுமா...?.


7 comments:

  1. ஒருக் குழந்தையோடு கொஞ்சுகிற சுகம் கவிதையில் விஞ்சுகிறது. மிக அழகாய் சொல்லி இருக்கும் எளிய நடைப் பிடித்திருக்கிறது. கவிஞன் மீதான கோபம், பற்கள் மீதான ஒப்பீடு, நகையை ஒப்பிட்டு நகைக்கும் புன்னகை எல்லாமே அருமை.

    மேலும் சிறப்பாய் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களின் பாராட்டுக்கு நன்றி...உங்கள் வாழ்த்து என்றும் தொடர வேண்டுகிறேன்.....

    ReplyDelete
  3. VERY NICE ONE KAY I FEEL JELOUS OF YOU U HAV OECAN OF IMAGINAION MY DEAR

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கு நன்றி சங்கர் ஜி...தொடர்ந்து உங்கள் கருத்தை தெரிவித்து வரவும்...

    ReplyDelete
  5. நன்றி பாஷா...தொடர்ந்து வருகை தரவும்...

    ReplyDelete
  6. பெண்மையின் பெருமைக்கு தாய்மை என்பது ஓர் பேரடையாளம். உதிரமாய், உணர்வாய், உயிராய் இருந்து அன்புச்சோலையில் பூத்த புதுமலரை புனர்ஜென்மதிர்க்கே சென்று அழைத்து வந்தவள், சொல்லால், செயலால்,உணர்வால் தன்னலமின்றி தான் சார்ந்த உறவுகளுக்காக வாழும் உத்தமியின் அந்த உன்னத உள்ளம் பெருமை அடையும் தருணங்கள், மகிழ்வு கொள்ளும் காலங்கள். இந்த சுகத்தை அவர்களுக்கு நாம் வேறு எந்தவகையில் பெற்றுத் தர முடியும். புண்ணியவதிகள் பெற்ற நாம் பெருமை கொள்ளத் தான் வேண்டும்.

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கு நன்றி பாலா..தாய்மையின் பெருமையை மிக அழகாக கூறினீர்கள்..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__