நம் இருத்தலும் இல்லாதிருத்தலும் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது எங்கு சமன் செய்யப்படுகிறதோ அங்கு நம் இருத்தல் அவசியமற்றதாகிறது. ...
*****
சூழ்ச்சிகளையே ஆபரணமாய் அணிந்தவர்களுக்கு அரிதாரம் பூசப்படாத புன்”னகை” ஒவ்வாமையை ஏற்படுத்திவிடு(ம்)கிறது...
****
நிகழ்வுகளை அதன்போக்கில் வேடிக்கைப் பார்க்க தெரிந்த(கற்ற)வர்களுக்கு வலியும், வேதனையும் இருப்பதில்லை..
****
நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்களுக்கும், குறித்தநேரத்தில் பணி முடிப்பவர்களுக்கும் கிடைக்கும் பாராட்டுப் பத்திரம் வேலையில்லாதவர்...
****
கடந்துசென்ற காலத்தையெண்ணி
கண்ணீர்விட்டு
நிகழ்காலத்தை விரயமாக்கியதை
எதிர்காலத்தில் நினைவுகூர்ந்து
வருந்தநேரிடலாம்...
****
தொலைத்தவற்றை மீட்டெடுப்பதாக எண்ணி, இருப்பதையும் தொலைத்துவிடுகிறோம்...பலநேரங்களில்...
****
வணக்கம்
ReplyDeleteஉண்மைதான் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி சகோ..:)
Deleteஅருமை அக்கா...
ReplyDelete:) மகிழ்ச்சி தம்பி..
Delete