முகப்பு...

Wednesday 2 May 2012

தெருவோர நட்சத்திரம்...


வாழ்வைத் தொலைத்த 
நட்சத்திரம்
வாழ்வதோ இருட்டினில்..

வீதிக்கு வாக்கப்பட்டோம் 

விதியின் விளையாட்டால்..!!

இரவு ராணி
,விபச்சாரி, 
விலைமாது
, வேசி
தெருவோர நட்சத்திரமென

பட்டங்கள் பல படிக்காமலேயே.....!

விரும்பா வாழ்வினில்..
விதியும் சதிசெய்ய...

விமர்சனத்திற்கு உள்ளாகும்...

மாதர்கள்..விலையாய்...!!


அறியாவயதில் ஆண்களுக்கிரையாய்...

ஆடம்பரத்திற்கு அடிமையான

வறுமையில் தேகத்தின் விலையாய்.

விலைமாந்தர்களாய்..!!


நட்சத்திரமாய் ஒளிர விரும்பியே

வீட்டைத்துறக்க நாள்தோறும்-
 
துறந்து மிளிரும்

தெருவோர நட்சத்திரமாய்..


பதவிக்கும்
, பேராசைக்காரனுக்கும்
பகடைக்காயாய்...

சோம்பேறிகளுக்குப்
 
பணம் காய்க்கும் மரமாய்..

உடல்பசித்தோருக்கு உணவகமாய்...


பழகிப்போன படுக்கைப்பகிர்வால்

கடவுளுக்கும்
,கல்லறைக்கும் 
செல்லாமல் கசக்கப்பட்ட மலர்கள்..

இவர்கள்......!!


இல்லத்தில் ஒளிவீசி
 
இன்பமயமாய் வாழவே
 
இன்றுவரை போராட
 
ஏமாற்றமே பரிசாய்...!!!


2 comments:

  1. ஆச்சர்யம்... நானும் இதேப்போல ஒன்று எழுதியிருக்கிறேன்... இது எனது 16வது வயதில் எழுதி வெகு நாட்களாய் எனது டைரியில் தூங்கிய கவிதை... நேரமிருந்தால் கொஞ்சம் வாசியுங்கள்... வாடகைக்கு ஒரு மலர்…
    http://jeevanathigal.blogspot.in/2011/04/blog-post_9116.html#links

    ReplyDelete
    Replies
    1. நன்றி..நிச்சயம் வாசிக்கிறேன்.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__