முகப்பு...

Thursday 14 May 2015

தேவை ஒரு முகமூடி..!!

நேசத்திற்குரியவரை
அன்புமலர்களால் அர்ச்சிக்க...
நிராகரிக்கப்பட்டு 
குப்பையில் வீசப்பட்ட மலர்கள்
வழியும் விழிநீரில்
வதங்காது பாதுகாக்க.,
அம்பென வீசப்பட்ட
அலட்சிய வார்த்தைகள்
இதயத்தைக் கிழித்துக் கொணரும்
இரத்தவாடை 

மலரின் மணத்தை மாற்றாதிருக்க...
பாசமென பாசாங்கு செய்வோரின்
வேடத்தை அறிந்தும்
அறியாமலிருக்க..

இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம்
மறந்திட...

நறுமணமிக்க புன்னகை மலரை
நிரந்திரமாய் அணிந்து
வலிமறைத்து வலம் வந்திட
தேவை ஒரு முகமூடி..! smile emoticon 

6 comments:

  1. நறுமணமிக்க புன்னகை மலரை
    நிரந்தரமாய் அணிந்து
    வலிமறைத்து வலம் வந்திட
    தேவை ஒரு முகமூடி!..

    அனைவருக்கும் அப்படித்தானோ!..

    ReplyDelete
    Replies
    1. :) வாங்க..இடம் நபர் பொறுத்து மாறுபடலாம்..:)

      Delete
  2. முடித்த விதம் அருமை! கருத்து நன்று!

    ReplyDelete
  3. அருமை....எல்லோருக்குமே ஏதாவது ஒரு தருணத்தில் தேவைப்பட்டே தீருகிறது முகமூடிகள்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__